லைஃப்ஸ்டைல்
காராமணி சுண்டல்

காராமணி சுண்டல்

Published On 2016-04-18 04:39 GMT   |   Update On 2016-04-18 04:39 GMT
காராமணி சுண்டல் வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
தேவையான பொருட்கள் :


காராமணி - 1/4 கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 1
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் காராமணியை வாணலியில் போட்டு 5 நிமிடம் வறுத்து, பின் அதனை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்த பின் குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்கி நீரை வடித்து, காராமணியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் அதில் உப்பு தூவி, வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து கிளறி விட வேண்டும்.

* அடுத்து அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறி, இறுதியில் சீரகப் பொடி தூவி பிரட்டி இறக்கினால், காராமணி சுண்டல் ரெடி!!!

Similar News