லைஃப்ஸ்டைல்

தினை பெசரெட்

Published On 2016-04-12 03:57 GMT   |   Update On 2016-04-12 03:57 GMT
சிறுதானியங்களில் தினை மிகவும் உடலுக்கு நல்லது. தினையை வைத்து பெசரட் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - ஒரு கப்,
தினை அரிசி - முக்கால் கப்,  
சின்ன வெங்காயம் - 10,
இஞ்சி - சிறிய துண்டு,
பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக்கேற்ப),
கொத்தமல்லித்தழை - கைப்பிடியளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

* தினை அரிசி, பாசிப்பருப்பை முதல் நாள் இரவே ஊறவிடவும்.

* மறுநாள் களைந்து, தோலுரித்த சின்ன வெங்காயம், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

* இதனுடன் உப்பு சேர்த்துக் கரைக்கவும்.

* தோசைக்கல்லை சூடாக்கி, அரைத்து வைத்த மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுத்தால்... தினை பெசரட் தயார்!

Similar News