லைஃப்ஸ்டைல்
கேழ்வரகு புட்டு

கேழ்வரகு புட்டு

Published On 2016-04-01 09:46 GMT   |   Update On 2016-04-01 09:46 GMT
கேழ்வரகு புட்டு மிகவும் சத்தானது மட்டுமின்றி, சுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 3 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி (துருவிக் கொள்ளவும்)
நெய் - தேவையான அளவு

செய்முறை :

* முதலில் ஒரு பாத்திரத்தில் கோழ்வரகு மாவு மற்றும் உப்பு போட்டு, லேசாக தண்ணீர் சேர்த்து புட்டு பதத்திற்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

* இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து கொதிக்க விட வேண்டும்.

* அதற்குள் ஒரு இட்லி துணியை நீரில் நனைத்து நீரை முற்றிலும் பிழிந்து, இட்லி தட்டில் விரித்து, பிரட்டி வைத்துள்ள கேழ்வரகு கலவையை இட்லி தட்டில் பரப்பி விடவும்.

* இட்லி பாத்திரத்தில் உள்ள நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 20 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, சூடாக இருக்கும் போதே அத்துடன் தேங்காய் துருவல் மற்றும் நெய் சேர்த்து பிரட்டி பரிமாறினால், சத்தான கேழ்வரகு புட்டு ரெடி!!

Similar News