பொது மருத்துவம்

இளநரை பிரச்சனையும் இயற்கை முறையில் தீர்வும்

Published On 2024-05-09 05:50 GMT   |   Update On 2024-05-09 05:50 GMT
  • கருவேப்பிலை, மருதாணி இலைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்த்து தினமும் தடவி வருவது நல்ல பலனை தரும்.
  • தலைமுடி கருமையாக இருக்க ஷாம்பூவுக்கு பதிலாக இயற்கையான சீயக்காய் பயன்படுத்தலாம்.

இன்றைய சூழலில் இளநரையால் ஆண்கள், பெண்கள், ஐந்து வயது குழந்தைகூட பாதிப்புக்குள்ளாகிறது. இளநரைக்கு மரபைவிட பிற காரணிகளே முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. உதாரணமாக ஊட்டச்சத்து குறைபாடு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தவறான உணவுமுறை காரணங்களாகும். இதில் மரபு சார்ந்து இளநரை ஏற்பட்டால், அதைத் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது.

* தலைமுடிக்கு தினமும் எண்ணெய் வைத்து பராமரித்தால், இளநரையை எளிதில் தடுக்கலாம். தலை வழுக்கையாவதையும் தடுக்கலாம். தலைமுடியும் அடர்த்தியாகும்.

* உணவில் கடுக்காய், சுண்டைக்காய், நெல்லிக்காய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

* தினம் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாறு பருகுவது தலைமுடி ஆரோக்கியத்திற்கு நல்லது. 

* சீரகம், வெந்தயம், மிளகை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் இளநரை குறையும்.

* கருவேப்பிலை, மருதாணி இலைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்த்து தினமும் தடவி வருவது நல்ல பலனை தரும்.

* நெல்லிக்காயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து வாரம் இருமுறை தலையில் தடவி வர இளநரை குறையும்.

* கரிசலாங்கண்ணி சாறு, கடுக்காய் தண்ணீரை தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.

* கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயம் உணவில் சேர்த்துக் கொள்வது இளநரை ஏற்படாமல் காக்கும்.

* தலைமுடி கருமையாக இருக்க ஷாம்பூவுக்கு பதிலாக இயற்கையான சீயக்காய் பயன்படுத்தலாம்.

* மிளகு தூளை தயிரில் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளித்து வரலாம்.

* அவுரிப் பொடியை மருதாணியுடன் சேர்த்து தலைக்கு தடவி குளிப்பதால் இளநரை நிறம் மாறத்தொடங்கும்.

Tags:    

Similar News