மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிர்கள் வளரவும் உதவிடும்.
- மக்காச்சோளத்தில் லுடீன் மற்றும் ஜியாசாந்தின் போன்ற ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன.
மக்காளச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன் குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடும் நொறுக்குத்தீனியாக இருக்கிறது. மக்காச்சோளத்தை வேகவைத்து சாப்பிடுவதும் சிறந்தது. மக்காச்சோளம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
செரிமானத்திற்கு உதவும்
மக்காச்சோளத்தில் உள்ள நார்ச்சத்துக்கள், செரிமான அமைப்பை சீராக இயங்கச் செய்து, மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை தடுக்கக்கூடியது. வயிறு உப்புசத்தையும் கட்டுப்படுத்தும். குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிர்கள் வளரவும் உதவிடும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
மக்காச்சோளத்தில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதய நோய் மற்றும் பக்கவாத அபாயத்தை தடுக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம் ஆரோக்கியமான ரத்த அழுத்தத்திற்கு வித்திடும்.
கண் ஆரோக்கியத்தை காக்கும்
மக்காச்சோளத்தில் லுடீன் மற்றும் ஜியாசாந்தின் போன்ற ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. இவை கண் புரை மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவு போன்ற கண் பிரச்சினைகளை தடுக்க வல்லவை.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்
மக்காச்சோளத்தில் உள்ள நார்ச்சத்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக வெளியிட வழிவகை செய்யும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
நச்சுக்களை வெளியேற்றும்
மக்காச்சோளத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற ஊக்குவிக்கும்.