பொது மருத்துவம்
பருவநிலை மாற்றம்- காய்ச்சல், ஜலதோஷம் சேர்ந்து வந்தால்...
- ஒரு ஏலக்காய், அதிமதுரம் அரை துண்டு, ஏழு மிளகு இவை மூன்றையும் உரலில் இடித்து சேர்க்கவும்.
- குழந்தைகளுக்கு பால் சங்கில் பாதி அளவு இக்கசாயமும் பாதி அளவு தேனும் கலந்து கொடுக்கலாம்.
பருவநிலையில் மாற்றம் ஏற்படும்போது சிலருக்கு காய்ச்சலும், ஜலதோஷமும் ஏற்படுவதுண்டு. ஒரு டம்ளர் தண்ணீரை சிறு தீயில் கொதிக்கவைத்து அதில் கற்பூரவல்லி இலை ஐந்து, அரச இலை (கொழுந்து) மூன்று, துளசி இலைகள் ஆறு சேர்க்க வேண்டும்.
ஒரு ஏலக்காய், அதிமதுரம் அரை துண்டு, ஏழு மிளகு இவை மூன்றையும் உரலில் இடித்து அதையும் அவற்றுடன் கலந்து அரை டம்ளர் வரும் வரை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும். ஆறிய பின்னர் இதை குழந்தை முதல் முதியவர் வரை குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு பால் சங்கில் பாதி அளவு இக்கசாயமும் பாதி அளவு தேனும் கலந்து கொடுக்கலாம். பெரியவர்கள் அப்படியே அருந்தலாம்.
இக்கசாயத்தை மூன்று வேளையும் எடுத்துக்கொள்ளலாம். குணமாகாத பட்சத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியமானது.