லைஃப்ஸ்டைல்
ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தமும்.. அளவீடும்

Published On 2021-10-23 03:30 GMT   |   Update On 2021-10-22 07:34 GMT
ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதனை செய்து வர வேண்டியது அவசியம். பரிசோதனையின்போது ரத்த அழுத்தம் குறித்து அளவிடப்படும் எண்ணையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தும் கார்டியோவாஸ்குலார் நோய், உலகளவில் அச்சுறுத்தலான நோய் பட்டியலில் இணைந்திருக்கிறது. மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்திருக்கிறது. ரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாற்றம்தான் கார்டியோவாஸ்குலார் நோய் உண்டாகுவதற்கு முக்கிய காரணமாகும். உலகளவில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு ஆளாகுகிறார்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் இதயத்தின் நலனை பாதுகாக்கலாம். ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதனை செய்து வர வேண்டியது அவசியம்.

பரிசோதனையின்போது ரத்த அழுத்தம் குறித்து அளவிடப்படும் எண்ணையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 90/60-க்கும் 120/80-க்கும் இடைப்பட்ட அளவில் இருந்தால் ரத்த அழுத்தம் சீராக இருப்பதை உறுதி படுத்திக்கொள்ளலாம். 120/80-க்கு அதிகமாகவும் 140/90-க்கு குறைவாகவும் இடைப்பட்ட எண்ணிக்கையில் அமைந்திருந்தால் பாதிப்பில்லை. ஆனால் அது சிறந்தது அல்ல. வழக்கத்தை விட ரத்த அழுத்தம் சற்று அதிகமாக இருப்பதாக அர்த்தம். அதனை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும். 140/90 என்ற அளவுக்கு அதிகமாக இருந்தால் உயர் ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட வழிவகுத்துவிடும். உடனே டாக்டரின் ஆலோசனை பெற்று உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.

உயர் ரத்த அழுத்த பிரச்சினையால் சிறுவர்களுக்கு பாதிப்பு உருவாகக்கூடும். 1 முதல் 3 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தை களுக்கு ரத்த அழுத்தம் 80/34 முதல் 120/75 என்ற நிலையில் இருக்க வேண்டும். அதுவே பெண் குழந்தைகளுக்கு 83/3 முதல் 117/76 என்ற இடைப்பட்ட அளவுகளில் இருக்க வேண்டும். 4 வயது முதல் 6 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளாக இருந்தால் 88/47 முதல் 128/84 வரையிலும், பெண் குழந்தையாக இருந்தால் 88/50 முதல் 122/83 என்ற அளவிலும் இருக்க வேண்டும்.

7 முதல் 10 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளுக்கு (92/53 முதல் 130/90), பெண் குழந்தை களுக்கு (93/55 முதல் 129/88) என்ற அளவிலும் இருக்க வேண்டும். பொதுவாக 55 வயதை கடந்த ஆண்களுக்கும், மெனோபாஸ் காலகட்டத்தை அடைந்த பெண்களுக்கும் ரத்த அழுத்தம் அதிகரிக்க தொடங்கும். அதனை கருத்தில் கொண்டு ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் இதய நோய் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட தொடங்கிவிடும்.
Tags:    

Similar News