லைஃப்ஸ்டைல்
உணவு உண்ணும் முறைகள்

உணவு உண்ணும் முறைகள்

Published On 2021-10-20 08:09 GMT   |   Update On 2021-10-20 08:09 GMT
இரவு நேரத்தில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர்சாதம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. தாமிர பாத்திரத்தில் பாலை ஊற்றி வைக்கக்கூடாது. அப்படியே வைத்தாலும் அதைக் குடிக்கக் கூடாது.
* காலையும், மாலையும் சேரும் சந்தியா காலங்களிலும் நடுஇரவு நேரத்திலும் எதையும் சாப்பிடக்கூடாது. ஏதாவது ஒரு தீபத்தின் வெளிச்சம் இல்லாமல் எதையும் சாப்பிடக்கூடாது.

* இரவுநேரத்தில் எள் சாதமும், பகல் நேரத்தில் பால் சாதமும் சாப்பிடக்கூடாது. வடை, பாயசம் இரண்டையும் தனக்கென்று தயார் செய்து சாப்பிடாமல் தெய்வத்திற்கு நிவேதனம் செய்த பின் சாப்பிடவும்.

* எந்த இலையிலும், இலையின் பின்புறத்தில் உணவை வைத்துச் சாப்பிடக்கூடாது. (தாமரை இலைதவிர)

* வாய்க்கு சென்ற அன்னத்தின் மிகுதியையும், பல்லினால் கடித்து கீழே வைக்கப்பட்டவைகளையும் மறுபடி சாப்பிடக்கூடாது.

* இரவு நேரத்தில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர்சாதம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. தாமிர பாத்திரத்தில் பாலை ஊற்றி வைக்கக்கூடாது. அப்படியே வைத்தாலும் அதைக் குடிக்கக் கூடாது.

* வெண்கலப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட இளநீரைக் குடிக்கக்கூடாது. பசுவின் பாலைவிடத் தூய்மையான உணவு எதுவும் கிடையாது.
Tags:    

Similar News