லைஃப்ஸ்டைல்
நெய் கலந்த காபி

நெய் கலந்த காபி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

Published On 2020-02-18 07:32 GMT   |   Update On 2020-02-18 07:33 GMT
வழக்கமாக பருகும் காபியுடன் ஒரு ஸ்பூன் நெய் கலந்தால் போதுமானது. நெய் கலந்த காபி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும்.
காலையில் எழுந்ததும் காபி பருகினால்தான் பெரும்பாலானோருக்கு அன்றைய பொழுதே விடிந்தது போல் இருக்கும். தலைவலியால் அவதிப்படுபவர்களும் காபியை விரும்பி பருகுகிறார்கள். அதிலிருக்கும் காபின் உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் தன்மை கொண்டது. காபி பருகுவதை கைவிட முடியாமல் தவிப்பவர்கள் அதனுடன் நெய் கலந்து பருகலாம்.

வழக்கமாக பருகும் காபியுடன் ஒரு ஸ்பூன் நெய் கலந்தால் போதுமானது. நெய் கலந்த காபி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும். சிலருக்கு காபி பருகினால் எளிதில் ஜீரணமாகாது. அதனால் வெறும் வயிற்றில் காபி பருக மாட்டார்கள். நெய் கலந்த காபி பருகுவது இந்த சிக்கலை போக்க உதவும். காபியில் இருக்கும் காபினின் வீரியத்தை குறைக்கும் தன்மை நெய்க்கு இருக்கிறது. கால்சியத்தின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் ஒமேகா 3 அமிலம், பிரியூரிக் அமிலம் உள்பட நல்ல கொழுப்பையும் கொண்டுள்ளது. குடல் ஆரோக்கியத்திற்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் நெய் உதவுகிறது.

நெய் கலந்த காபி பசியை தூண்டும் ஹார்மோனின் உற்பத்தியை குறைத்துவிடும். அதன் காரணமாக சாப்பிடும் அளவு குறையும். வெண்ணெய்யை விட நெய்யில் இனிப்பும், உப்பும் குறைவாக இருப்பதாக ஊட்டச்சத்தியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். காபியில் இனிப்பை தவிர்க்க நினைப்பவர்கள் நெய்யை உபயோகிக்கலாம்.

நெய்யில் இருக்கும் கொழுப்பு மூளைக்கு நல்லது. நரம்பு மண்டல தொடர்புகளையும் ஹார்மோன்களின் உற்பத்தியையும் மேம்படுத்தும். மனநிலையையும் மேம்படுத்த உதவும்.
Tags:    

Similar News