பெண்கள் உலகம்

உடல் எடை குறைக்க உதவும் செலரி

Published On 2019-04-04 13:10 IST   |   Update On 2019-04-04 13:10:00 IST
உடல் எடை குறைக்க தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறீர்களா? அப்பொழுது இந்த செலரியின் பலன்களை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம்.
உடல் எடை குறைக்க தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறீர்களா? அப்பொழுது இந்த செலரியின் பலன்களை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். செலரி உலகம் முழுவதும் பல மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சீனாவில் அதிக அளவு மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இப்பொழுது செலரி ஜூஸ் பிரபலமாகி வருகிறது. உடல்நலம் காப்பதில் செலரிக்கு பெரும் பங்கு இருப்பதால் அதிகமான மக்கள் செலரியை விரும்பிகிறார்கள்.  நாட்பட்ட நோய்களிலிருந்து ஆரோக்கியமான ஹெல்த் வரை இந்த செலரி பலனளிக்கக்கூடியது.

கலோரிகளே இல்லை. முழுவதும் தண்ணீர் மட்டுமே நிறைந்தது.  இந்த செலரி ஜூஸை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

செலரியில் கலோரிகள் அறவே கிடையாது. அதிக அளவு தண்ணீர் கொண்டது. இதனால் கலோரிகள் உடலில் சேராது. அதிக அளவு நார்ச்சத்தும் இருப்பதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி தரக்கூடியது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.  

உடலை டீடாக்ஸ் செய்வதால் டாக்ஸின்கள் வெளியேறுகிறது.  சருமத்துக்கும், உடலுக்கும், முடிக்கும் பாதுகாப்பு தருகிறது. செலரியில் ஊட்டச்சத்துகளான வைட்டமின்கள், பொட்டாசியம் இருப்பதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

உணவு நிபுணர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் செலரி ஜூஸ் குடிப்பதால் நல்ல பலனைத் தரும் என்று தெரிவிக்கின்றனர். காலை மட்டும் இல்லாமல் சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்போ அல்லது பின்போ கூட குடிக்கலாம். நீங்களே மிக எளிதாக இந்த செலரி ஹெல்த் ட்ரிங்கைத் தயாரிக்கலாம்.

தினமும் உங்கள் டயட்டில் செலரியை சேர்ப்பதால் நல்ல பலனைத் தரும். உடற்பயிற்சி செய்வதை ஒரு போதும் கைவிடாதீர்கள். 

Similar News