பெண்கள் உலகம்

சோர்வை போக்கும் எளிய வழிமுறைகள்

Published On 2018-12-23 10:28 IST   |   Update On 2018-12-23 10:28:00 IST
பல நேரங்களில் காரணமின்றி தூங்கி எழுந்தவுடன் நாம் சற்று சோர்வாக உணர்வோம். நம்மை சுறுசுறுப்பாக்கிக் கொள்ள பல எளிய முறைகள் உள்ளன.

பல நேரங்களில் காரணமின்றி தூங்கி எழுந்தவுடன் நாம் சற்று சோர்வாக உணர்வோம். ஒரு கப் காபி கிடைத்தால் சுறுசுறுப்பாக இருப்போமே என்று தோன்றும். ஆனால் நம்மை சுறுசுறுப்பாக்க காபி தான் அவசியம் என்பதல்ல. நம்மை சுறுசுறுப்பாக்கிக் கொள்ள பல எளிய முறைகள் உள்ளன.

* சிறிது நேரம் சூரிய ஒளி உடலில் படும்படி நில்லுங்கள். இது உங்ள் வைட்டமின் டி சத்தினை கூட்டும். மனநிலையினை உற்சாக மாக்கும். உடலையும், மனதினையும் சுறுசுறுப்பாக ஆக்கி விடும். அது மட்டுமல்ல இவ்வாறு செய்வது இரவு தரமான தூக்கத்தினை அளிக்குமாம். காலை இளம் சூரிய ஒளிக்கதிர் சில நிமிடங்கள் நம் மீது படுவது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைக்கும்.

* அறையின் சீதோஷ்ண நிலையில் இருக்கும் நீரில் குளியுங்கள். இது ஒரு மின் அதிர்வுகளை மூளைக்குக் கொடுக்கும். முகத்தினை குளிர்ந்த நீரினால் கழுவுவதும் சிறந்த ரத்த ஓட்டத்தினை ஊக்குவிக்கும். உடலில் சுறுசுறுப்பு ஏற்படும்.

* சிரிப்பு போன்ற சிறந்த மருந்து கிடையாது. சிரிப்பு உங்கள் உடலில் ஆக்ஸிசன் அளவினைக் கூட்டும். இருதயம், நுரையீரல் நன்கு இயங்கும். ஸ்ட்ரெஸ் நீங்கும். காப்பியினை விட மிகச்சிறந்தது. நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர்களோடு இருங்கள்.

* சோர்வுக்கு ஒரு காரணம் உடலில் நீர் சத்து குறைதல் ஆகும். அதுவும் இரவு தூக்கத்தில் தொண்டை வறண்டு இருக்கும்.  எனவே பல் துலக்கிய பின் ஒரு கிளாஸ் நீர் பருகுங்கள்.

* சிறிது நேரம் நடங்கள். துரித நடை இல்லாவிடினும் இயற்கையான முறையில் திறந்த வெளியில் சிறிது நேரம் நடங்கள். இது ரத்த ஓட்டத்தினை சீராக்கும்.

* தியானம் தினம் 20 நிமிடங்கள் செய்யுங்கள். இது உங்கள் சக்தி அளவினைக் கூட்டும்.

ஆக இயற்கை வழியில் சக்தியினைக் கூட்டுவது மிக எளிதானதே. செயல்படுத்துவோம்.
Tags:    

Similar News