லைஃப்ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கொய்யா

Published On 2018-08-11 03:38 GMT   |   Update On 2018-08-11 03:38 GMT
சர்க்கரை நோயாளிகள் எல்லா பழங்களையுமே கண்டு அலறுவார்கள். ஆனால், சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கொய்யா உதவும்.
கொய்யாவுக்கு வயது வரம்பு எதுவும் இல்லை. ஆம்… உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் வல்லமை கொண்டது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமே பலன் தரும் பழம் இது.

கொழுப்பைக் குறைக்கும் திறன் கொய்யாவுக்கு உண்டு. தினமும் 2 கொய்யாப்பழங்கள்சாப்பிட்டு வந்தால் தேவையில்லாத உடல் எடையைக் குறைக்க முடியும்.

சர்க்கரை நோயாளிகள் எல்லா பழங்களையுமே கண்டு அலறுவார்கள். ஆனால், கொய்யா அவர்களுக்கும் நண்பனே! காரணம், சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கொய்யா உதவும். அதேபோல், தைராய்டு பிரச்னையைத் தடுக்கவும் கொய்யா மாமருந்து.

வைட்டமின் சி அதிகம் கொண்ட கனி இது. வைட்டமின் சி மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறவர்கள், அதற்குப் பதிலாக பக்கவிளைவற்ற… இயற்கையான கொய்யாவை முயற்சி செய்து பார்க்கலாம்.

சளித்தொல்லையிலிருந்தும், குடல் தொடர்புடைய குறைகளை நிவர்த்தி செய்யவும் கொய்யா சரியான சாய்ஸ். பார்வைத் திறனை மேம்படுத்த உதவும் வைட்டமின் ஏ-வும் கொய்யாப்பழத்தில் அதிகம்… அமோகம்.

ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறவர்களும், பாக்டீரியா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறவர்களும் கொய்யாவோடு ஃப்ரண்ட்ஷிப் வைத்து கொள்வது நல்லது.

உடலின் திசுக்களைத் தாக்கும் புற்றுநோய்க்கு எதிராக சண்டையிடும் குணம் கொண்டது கொய்யா. கொய்யாவிலிருக்கும் Lycopene சத்துதான்அதன் ராஜ ரகசியம்.

Last but not least… கொய்யாப்பழத்தை வெட்டிச் சாப்பிடுவதைவிட கடித்துச் சாப்பிடுவதே முழுமையான பலனைத் தரும்.
Tags:    

Similar News