லைஃப்ஸ்டைல்

முதுகு வலியா? கவலை வேண்டாம்...

Published On 2018-07-20 03:00 GMT   |   Update On 2018-07-20 03:00 GMT
அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு வரும் முதுகு வலியில் இருந்து விடுபட 10 வழிகளை கடைபிடித்தால் முதுகுவலியில் இருந்து விடுபடலாம்.
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்களிடம் உடல் உழைப்பு என்பது இல்லாமல் போய்விட்டது. உட்கார்ந்த இடத்திலேயே 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதன் காரணமாக அவர்கள் முதுகுவலியில் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது. இதில் இருந்து விடுபட 10 வழிகளை மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இவற்றை கடைபிடித்தால் முதுகுவலியில் இருந்து விடுபடலாம் என்றும், இதனால் கவலை வேண்டாம் என்றும் தெரிவிக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

1. தினமும் காலை 20 முறை, மாலை 20 முறை கைகளை மேல் நோக்கி நீட்டுங்கள்.

2. அமரும்போது வளையாதீர்கள்.

3. தினமும் 21 முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள்.

4. தினமும் குறைந்தபட்சம் 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

5. நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்.

6. இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள்.

7. சுருண்டு படுக்காதீர்கள்.

8. கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள்.

9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள்.

10. 70 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள். 
Tags:    

Similar News