லைஃப்ஸ்டைல்

சிறுதானியங்களில் நிறைந்துள்ள சத்துக்கள்

Published On 2017-10-29 04:29 GMT   |   Update On 2017-10-29 04:29 GMT
தற்போது சிறுதானிய உணவுகளை உண்ணும் ஆர்வம் அதிகரித்திருக்கின்றன. சிறுதானியங்களில் என்னென்ன சத்துகள் நிறைந்திருக்கின்றன என்று பார்க்கலாம்.

தற்போது சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வும், சிறுதானிய உணவுகளை உண்ணும் ஆர்வமும் அதிகரித்திருக்கின்றன.

ஆனால் சிறுதானியங்களில் என்னென்ன சத்துகள் நிறைந்திருக்கின்றன என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

இதோ, விவரம்...

கம்பு: ‘டைப் 2’ சர்க்கரைநோய் வராமல் தடுக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், கிறுகிறுப்பு, நாவறட்சி போன்றவை நீங்க கம்பங்கூழை மோரில் கலந்து பருகலாம்.

கேழ்வரகு: உடல்பருமன் குறைய உதவும். சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்த உதவும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும்.


குதிரைவாலி:
செரிமான சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். சர்க்கரைநோயாளிகளுக்கு குதிரைவாலி சிறந்த உணவு. இதில் நிறைந்துள்ள கால்சியம் எலும்பை வலுப்படுத்தும்.

வரகு: ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். வயிற்றுப்புண், முதுகுவலி, மூட்டுவலி போன்றவற்றைச் சரிசெய்யும். ரத்த சுத்திகரிப்பானாகச் செயல்படுவதுடன், ரத்த உற்பத்திக்கும் உதவும்.

சோளம்: செரிமானக் கோளாறைச் சரிசெய்யும். உடல்பருமன் குறைக்க உதவும். செல்களை புத்துணர்வு பெறச்செய்யும். அவற்றின் வளர்ச்சிக்கு உதவும்.

சாமை: ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். ரத்தசோகையைப் போக்கும். நார்ச்சத்து நிறைந்தது. உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி, மலச்சிக்கலைச் சரிசெய்யும்.

திணை: உடனடி சக்தியை தரக் கூடியது திணை. இது செரிமானக் கோளாறைச் சரிசெய்யும். கொழுப்பைக் குறைக்கும். உடல்பருமனைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதய நோய்கள் வராமல் தடுக்கும். பார்வைத்திறனை மேம்படுத்தும்.

Tags:    

Similar News