லைஃப்ஸ்டைல்

ஒற்றைத் தலைவலிக்கு காரணமும் - நிவாரணமும்

Published On 2016-08-31 04:50 GMT   |   Update On 2016-08-31 04:50 GMT
சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்கும்போது அல்லது அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது பலர் இந்த ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள்.


migraine slider


ஆண்களை விட பெண்களே ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்கும்போது அல்லது அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது பலர் இந்த ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள். நரம்புகளில் உண்டாகும் இறுக்கமே தலைவலி வருவதற்கான முக்கிய காரணமாகும்.

வேலை செய்ய வேண்டுமே என நிறைய பேர் தலைவலி வரும்போதெல்லாம் ஒரு மாத்திரை எடுத்துக் கொள்வார்கள். அது தவறு. இது பக்க வாதம். இதய நோய்கள் மற்றும் சிறு நீரக பாதிப்பை தந்துவிடும். ஆகவே அதற்கான காரணங்கள் என்னெவென்று அறிந்து அதனை தடுக்க முயலுங்கள்.

தலையில் நெற்றிப்பொட்டில், பின்பக்கத் தலை போன்ற இடங்களில் இதன் வலி தெரியும். கண்களிலும், தாடையிலும், முதுகிலும்கூட வலி தெரியலாம். மன அழுத்தம், மனச் சோர்வு, பதட்டம், அடிக்கடி கோபம், டென்ஷன் என இருப்பது ஆகியவற்றால் இத்தலைவலி ஏற்படும். இது தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு இருந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர் அதிகரித்தல் ஆகியன உண்டாகும்.

பல ஆண்டுகளாக, தலைக்குச் செல்லும் நரம்புகள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைப்படுவதால்தான் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் நம்பினார்கள். புதிய கண்டுபிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுதான் தான் காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும்போது, மூளைக்குச் செல்லும் செல்கள் அழிந்துபோக வாய்ப்புகள் உண்டு. அதனால் தலைவலி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவுவகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்த்தல் மிக நல்லது.

தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால் நல்ல தூக்கம் வரச்செய்யும் வழி முறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மனதை எப்போது மகிழ்ச்சியான சூழ்நிலையில் வைத்திருக்க வேண்டும். பிடித்தவர்களுடன் பேசுவது, வெளியில் சென்று வருவது என இருந்தால் தலைவலி வராமல் தடுக்க முடியும்

Similar News