லைஃப்ஸ்டைல்

பப்பாளி மருந்தாகும் விதம்

Published On 2016-07-22 03:12 GMT   |   Update On 2016-07-22 03:12 GMT
பப்பாளிப் பாலை எடுத்து மேற்பூச்சாகத் தடவி வரவாய்ப்புண், அச்சரம், நாக்குப்புண், தொண்டை ரணம் ஆகியன குணமாகும்.
* பப்பாளி இலையை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து வீக்கம், நரம்புவலி, நரம்பு தளர்ச்சி ஆகியவற்றிற்கு ஏற்ற இடமெல்லாம் அல்லது பப்பாளி இலையை சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டோடு மேற்பற்றாக வைத்து கட்டலாம்.

* பப்பாளிப் பாலுடன் சிறிது மஞ்சள் சேர்த்துக் குழைத்து வேர்க்குரு போன்ற தோலில் ஏற்படும் தொல்கைளுக்குத் தடவ விரைவில் குணமாகும்.

* பப்பாளிக்காயை சமைத் துச்சாப்பிட சுவையாக இருப்பதோடு ஈரல் நோய் கள் அத்துணையும் குணமாகும்.

* பப்பாளிப் காயை உலர்த்தி பொடித்துக்கூட மருந்தாகப் பயன்படுத்தலாம்.

 * பப்பாளிப்பால் 10 மி.லி. அதற்கு சம அளவு தேன் 40 மி.லி. நீர் ஆகியவற்றை நன்கு உறவாகும்படிக் கலந்து உள்ளுக்குக் குடித்து விட்டு இரண்டு மணி நேரம் சென்ற பின் 50 கிராம் அமணக்கு எண்ணெய்யும் சம அளவு பழச்சாறும் கலந்து குடிக்க வயிற்றிலுள்ள புழுக்கள் அத்தனையும் வெளியேறி விடும்.

* பப்பாளிப்பால் 10 மி.லி. அளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து அல்லது சர்க்கரையும் பாலும் சேர்த்து உள்ளுக்குக்கு குடிப்பதால் வயிற்று வலி குன்மம் ஆகியன குணமாகும்.

* பப்பாளிப் பாலை எடுத்து மேற்பூச்சாகத் தடவி வரவாய்ப்புண், அச்சரம், நாக்குப்புண், தொண்டை ரணம் ஆகியன குணமாகும்.

* பப்பாளிப் பாலை படிகாரம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) சேர்த்துக் குழைத்து மேற்பூச்சாக பூச மண்டைக் கரப்பான், சொறி, சிரங்கு ஆகிய தோல் நோய்கள் தீரும்.

* 10 முதல் 15 எண்ணிக்கையில் பப்பாளி விதைகளை எடுத்து தீ நீராக்கிக் குடிப்பதால் வயிற்றுப்பூச்சிகள் விலகும்.

* ஒரு பிடி அளவு பப்பாளி இலையை எடுத்து அதனோடு மிளகு, சீரகம், லவங்கம், ஏலம் ஆகியன சேர்த்து தீ நீராக்கிக் குடிப்பதால், டெங்குக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் மலேரியாக் காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், காமாலைக் காய்ச்சல் ஆகியன அனைத்தும் குணமாவதோடு உடல் வலியும் தணியும்.

* பப்பாளி இலையைத் தீ நீராக்கிக் குடிப்பதால் ரத்த வட்டணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

பப்பாளி எவ்வித முயற்சியும் இல்லாமல் எளிதில் பயிராகக்கூடிய ஒன்று. உடலுக்கு குளிர்ச்சியும், உரமும், ஆரோக்கியமும் தருவதோடு பல்வேறு விஷக் காய்ச்சலையும் தணிக்கக் கூடியதாக இருப்பதால் இது அனைவரது இல்லத்திலும் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Similar News