லைஃப்ஸ்டைல்

காபியை விட கிரீன் டீ நல்லதா?

Published On 2016-06-30 03:34 GMT   |   Update On 2016-06-30 03:34 GMT
உடலுக்கு ஆரோக்கியம் தருவதிலும், புத்துணர்ச்சி தருவதிலும் காபியை விட கிரீன் டீ தான் சிறந்த சாய்ஸாக இருக்கும்.
காபி மூளைக்கு புத்துணர்ச்சி தந்து பல மடங்கு வேலையை செய்யத் தூண்டும். காபி குடிப்பதால், உடனடியாக எனர்ஜி கிடைத்தாலும், அதை அடிக்கடி குடித்தால் உடலுக்கு நல்லதல்ல. ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் தருவதிலும், புத்துணர்ச்சி தருவதிலும் காபியை விட கிரீன் டீ தான் சிறந்த சாய்ஸாக இருக்கும். காபியை விட கிரீன் டீ ஏன் எப்படி சிறந்தது என்று அறிந்து கொள்ளுங்கள்.

காபி குடித்தால் எவ்வளவு உற்சாகமாய் உணர்வீர்களோ அதே போல் கிரீன் டீ குடித்தாலும் உணர்வீர்கள். காரணம் இதிலுள்ள தியானைன் என்ற மூலக்கூறு மூளையை துரிதமாக செயல்படச் செய்யும். கிரீன் டீ பாலுணர்வைத் தூண்டும். செக்ஸ் ஹார்மோன்களை ஊக்குவிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நரம்பு சம்பந்தப்பட்ட வியாதியான அல்சீமரை வரவிடாமல் கிரீன் டீ தடுக்கும். கேட்சின் என்கின்ற ஃப்ளேவினாய்டு கிரீன் டீயில் உள்ளது. இது நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

உடலில் தொற்றிக்கொள்ளும் கிருமிகளை கிரீன் டீ அழிக்கும். இது ரத்தத்தில் கலக்கும் நச்சுக்களையும் வெளியேற்றும்.

கிரீன் டீ இன்சுலின் சுரப்பை தூண்டும். இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க உதவுகிறது.

உடலுக்கு தேவையான எனர்ஜியை வளர்சிதை மாற்றத்தின் போதுதான் நாம் பெற்றுக் கொள்கிறோம். வளர்சிதை மாற்றம் நன்றாக நடந்தால், ஆரோக்கியமாக வாழலாம். கிரீன் டீ வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும்.

கிரீன் டீயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றன. அவை உடலில் உருவாகும் பல புற்று நோய்களை தடுக்கக் கூடியவை. ஆகவே தினமும் கிரீன் டீ குடிப்பதை ஒரு கட்டாய பழக்கமாகவே நீங்கள் வைத்து கொண்டால் ஆரோக்கியமான வாழலாம்.

காபி அந்த நேரத்திற்கு சுறுசுறுப்பையும், புத்துணர்ச்சியையும் தரும். ஆனால் அதிகளவில் காபியை அருந்தினால் அதனால் உடல் பாதிப்புகள்  அதிகம் ஏற்படலாம். ஆனால் கிரீன் டீ உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். மேலும் நம்மை புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்.

Similar News