லைஃப்ஸ்டைல்

சர்க்கரை நோய்க்கு ஏன் இத்தனை கவனம் செலுத்த வேண்டி உள்ளது?

Published On 2016-06-01 05:29 GMT   |   Update On 2016-06-01 05:29 GMT
அதிக சர்க்கரை நரம்புகளையும், ரத்தக் குழாய்களையும் பாதிக்கும். இது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும்.
அதிக சர்க்கரை நரம்புகளையும், ரத்தக் குழாய்களையும் பாதிக்கும். இது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும்.

* கண்களில் சீக்கிரமாகவே புரை ஏற்படும்.

* கண்களில் ஏற்படும் நரம்பு பாதிப்பு பார்வையினை வெகுவாய் பாதிக்கும்.

* விழி திரை பாதிப்பு ஏற்படும்.

* இருதய ரத்த குழாய்கள் தடிப்பதால் இருதய நோய், பக்க வாதம், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு என கணக்கில்லா பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

* சிறுநீரக ரத்த குழாய்கள் பாதிக்கப்படுவதால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.

.* பாதங்களில் காயங்கள் ரத்த ஒட்ட குறைவு காரணமாக ஆறுவதற்கு நேரம் கூடலாம். விரல்கள், கால் எடுக்கும் அளவு கூட பாதிப்பு ஏற்படும் அபாயம் உண்டு.

* நரம்புகள் பாதிக்கப்படுவதால் வலி, மரத்து போகுதல் ஏறபடலாம்.

* சருமத்தில் அரிப்பு, கிருமிபாதிப்பு, நிறம் மாறிய சருமம் ஏற்படலாம். இதனையெல்லாம் தவிர்ப்பது தானே நல்லது.

* எப்போதும் 70-130 அளவிலேயே சாப்பிடும் முன் சர்க்கரை இருக்கட்டும்.

* சாப்பிட்ட 2 மணி நேரத்தில் 180-க்குள் இருக்கட்டும்.

* கிறீநீ அளவு 7 சதவீதம் உள்ளாக இருக்கட்டும்.

* ரத்த அழுத்தம் 130/80க்குள்ளே இருப்பது நல்லது.

* கொழுப்பு 200க்குள் இருப்பது நல்லது.

* சிறிய பிரச்சினை என்றாலும் முறையான மருத்துவ பரிசோதனை எடுத்துக் கொள்ளுங்கள்.

* சிகரெட்டினை அடியோடு விட்டு விடுங்கள்.

* கண்களை முறையான செக்அப்புடன் பாதுகாக்கவும்.

* தினமும் உங்கள் பாதங்களை கவனியுங்கள். பாதுகாத்துக் கொள்ளுங்கள். நகங்களை சீராய் வெட்டி விடுங்கள்.

* வாயில் தான் அதிக பாக்டீரியா கிருமிகள் அதிகம். அதுவும் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாவிடில் ஈறுகள் பாதிப்பு அதிகம் ஏற்படும். இதனால் ஈறுகளும், எலும்பும் பாதிக்கப்படும்.

* ஈறுகளில் ரத்த கசிவு இருந்தால்

* சிவந்த, வீங்கிய வலிக்கும் ஈறுகள் இருந்தால்

* வாய் துர்நாற்றம் இருந்தால்

* பல் ஆடுதல் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

* சாப்பிடும் போதோ, சூடாக, ஜில்லென குடிக்கும் போதோ பல்லில் வலி, கூச்சம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

* புகை பிடிப்பவர்களுக்கு ஸ்வங்கஸ் பாதிப்பு வாயில் அதிகரித்து விடும். எனவே புகை பிடிப்பதனை நிறுத்தி விடுங்கள்.

* சர்க்கரை நோய் பாதிப்பில் வாய், பல், ஈறு பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானது என்பதனை உணருங்கள்.

Similar News