பெண்கள் உலகம்
வெறும் காலில் நடைப்பயிற்சி

வெறும் காலில் நடைப்பயிற்சி செய்யுங்க... அப்புறம் பாருங்க மாற்றத்தை...

Published On 2021-03-09 07:56 IST   |   Update On 2021-03-09 07:56:00 IST
வெறும் காலில் நடைப்பயிற்சி செய்வது கேவலம் கிடையாது. வெறும் காலில் நடைப்பயிற்சி செய்த பின் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை பாருங்க அசந்து போயிடுவீங்க...
பொதுவாக அன்றைய காலகட்டத்தில் செருப்பு அணியாமல் காட்டிலும், மேட்டிலும் நடந்தனர். அதுவே அவர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாக அமைந்தது. ஆனால் இப்போது வீட்டில் உள்ளே போட்டு நடக்க ஒரு காலனி, வெளியில் சென்றால் போடுவதற்கு ஒரு காலனி என நவ நாகரீகம் மாறிவிட்டது.

பொதுவாக வெறும் காலில் நடப்பதால் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும். அதேபோல் நிலத்தில் காலூன்றி நிற்பதால் சாதாரணாமாக உடலில் உள்ள 70% நீரை விட அதிகம் சுரக்கும். பாதத்திற்கு அடியில் விரல்கள் முதல் குதிகால் வரை அமைந்திருக்கும் ஒவ்வொரு நரம்புகள் மூளை, இருதயம் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன.

வெறும் காலில் ஓடுவதும், சிறிது நேரம் நடப்பதும் இரத்த ஓட்டத்திற்கும், ஆரோக்கியமான வாழ்வுக்கும் இன்றிமையாதது என மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வெறும் காலில் நடப்பதால் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும் மற்றும் மன உளைச்சலை குறைக்கவும், தூக்கத்தை அதிகரிக்கவும் முடியும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது..

கரடுமுரடான தரையில் நடக்கும் போது பாதத்திற்கு நேரடியாக அழுத்தம் ஏற்படுவதால், அது உடற்செயற்பாட்டை ஊக்குவிக்கும். வெறும் காலில் நடப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. இதனால் இதயம் சார்ந்த எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. இரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்புகளை குறைக்கின்றது. .

வெறும் காலில் நடைபயிற்சி மேற்கொண்டால் நரம்பு மற்றும் எலும்புகள் வலுவடைகின்றது. அதுவும் அதிகாலை வேளையில் புல்லின் மீது வெறும் காலில் நடத்தால் கண் பார்வை கூர்மையாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Similar News