பெண்கள் உலகம்
புஜங்காசனம் வஜ்ராசனம்

உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இந்த ஆசனங்களை செய்யுங்க...

Published On 2021-03-04 07:47 IST   |   Update On 2021-03-04 07:47:00 IST
மெல்லிய தேகம் கொண்டவர்கள் உடல் எடையை அதிகரிக்க எந்த வகையான யோகாசனங்களை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக உடலை கட்டுக்கோப்பாக வைக்கவே பலரும் யோகாசனங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் உடல் எடையை  அதிகரிக்க செய்யும் யோகாசனங்களும் சில உள்ளன.அது என்னவெல்லாம் என்று தற்போது பார்க்கலாம்.

புஜங்காசனம்:-

இந்த ஆசனம் செய்வதற்கு  முதலில் குப்புறப் படுக்க வேண்டும். பின் கைகளை முன்புறம் வைத்து நீட்டி, உடலை மேலே தூக்க வேண்டும்.மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியே விட வேண்டும்.இப்படி 2 முறை என ஒவ்வொரு முறைக்கும் 10 நொடிகள் இடைவெளி விட்டு செய்ய வேண்டும்.

சர்வங்காசனம்:-

இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் தரையில் கால்களை நீட்டி படுக்க வேண்டும்.பின்  கீழ் உடலை மெதுவாக மேலே தூக்க வேண்டும்.உடலின் மொத்த சுமையையும் தோள்பட்டை சுமக்க வேண்டும். கைகளால் உடலைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.இந்த ஆசனத்துடன், ஒருவர் சரியான டயட்டையும் மேற்கொண்டால், உடல் எடை அதிகரிப்பது உறுதி.

வஜ்ராசனம்:-

இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் முழங்கால் போட்டு, குதிகால்களின் மீது அமர வேண்டும். பின் கைகளை முழங்கால்களின் மீது நீட்டி வைக்க வேண்டும். மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, வெளி விட வேண்டும்.

பவனமுக்தாசனம்:-

முதலில் தரையில் படுத்து, கால்களை  மடித்துக் கொள்ள வேண்டும். பின் மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளால் கால்களை இறுக்கமாக இழுத்து, நெஞ்சோடு ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கால்களை விடும் போது, மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும். இப்படி 5-10 முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.

மட்ஸ்யாசனம்:-

இந்த ஆசனம் செய்வதற்கு தரையில் முதலில் படுக்க வேண்டும். பின் கைகளை பிட்டத்தின் அடியில் வைக்க வேண்டும்.அதன் பின் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து உச்சந்தலையானது தரையைத் தொடும் படி செய்ய வேண்டும். பின்பு தலையை சாதாரண நிலைக்கு கொண்டு வரும் போது மூச்சை வெளிவிட வேண்டும்.

சவாசனம்:-

இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் தரையில் படுக்க வேண்டும். பின் உள்ளங்கை மேல் நோக்கியவாறு கைகளை பக்கவாட்டில் வைக்க வேண்டும். இந்நிலையில் உடலை ரிலாக்ஸாக வைத்து, கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும்.

உட்டாசனம்:-

இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் நேராக நிற்க வேண்டும். பின் மெதுவாக மூச்சை உள்ளிழுத்தவாறு முன்னோக்கி குனிந்து பாதங்களைத் தொட வேண்டும். இப்படி 5 நொடிகள் இந்நிலையில் இருக்க வேண்டும்.அதன் பின் மெதுவாக மூச்சை வெளியிட்டவாறு பழைய நிலைக்கு செல்ல வேண்டும்.

கபல்பதி யோகா:-

இந்த யோகா செய்வதற்கு கால்களை மடக்கி உட்கார்ந்து, கைகளை தொடையின் மீது வைக்க வேண்டும்.பின் மூச்சை உள்ளிழுத்து, வேகமாக மூச்சை வெளிவிட வேண்டும். இப்படி 5 நிமிடம் செய்ய வேண்டும்.

Similar News