லைஃப்ஸ்டைல்
நடைப்பயிற்சி

வாக்கிங் சென்றால் மூளைக்கு நல்லது...

Published On 2021-01-30 02:22 GMT   |   Update On 2021-01-30 02:22 GMT
தொப்பையை குறைப்பதில் ஆரம்பித்து, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் வரை பல நோய்களுக்கு வாக்கிங் பரிந்துரைக்கப்படுகிறது
தொப்பையை குறைப்பதில் ஆரம்பித்து, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் வரை பல நோய்களுக்கு வாக்கிங் பரிந்துரைக்கப்படுகிறது. இப்படி பல்வேறு நோய்களில் இருந்து விடுவிக்கும் நடைப்பயிற்சியால், மேலும் ஒரு பலன் குறித்து ஆய்வில் தெரியவந்துள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஆய்வில், வாக்கிங் செல்வதால், மூளை இயக்கம் சீரடைவதாக தெரியவந்துள்ளது.

மூளை பாதிப்பு கொண்டவர்களை கொண்டு, வாரத்துக்கு மூன்று மணி நேரம் வீதம், ஆறு மாதத்துக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முடிவில், அவர்களின் மூளை இயக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது நடத்தப்பட்ட ஆய்வு சிறிய அளவிலானதுதான். விரைவில் இது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

தினமும் அரை மணி நேரம் நடைபயிற்சி செய்தால், ஆயுள் கூடும் இளமையாக மேலும் சில ஆண்டுகள் வளைய வரலாம் என புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

வாரத்தில் குறைந்தது ஒரு மணி நேரம் விறுவிறுப்பாக வாக்கிங் செய்தால், அது ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் தாக்கும் அபாயத்தை 35 சதவீதம் குறைக்கிறது. சர்க்கரை நோய் வரும் அபாயத்தை 50 சதவீதம் குறைக்கிறது. சிலவகை புற்றுநோய்கள் வரும் அபாயத்தை 20 முதல் 50 சதவீதம் வரை குறைக்கிறது. உடல் எடையை குறைப்பதற்கும் வாக்கிங் உதவுகிறது.

கடற்கரை, பூங்கா, திறந்தவெளி, மொட்டைமாடி என எங்கு வாக்கிங் சென்றாலும் சுத்தமான காற்று அதிகம் கிடைப்பதால் நுரையீரல் சீராக இயங்க உதவுகிறது. ஆஸ்துமா தாக்கும் அபாயத்தையும் தவிர்க்கலாம். தவறாமல் வாக்கிங் செல்பவர்களுக்கு நினைவுத்திறன் கூடும்.

மூளையின் செயல்பாடு சுறுசுறுப்பாகும். இளம்வயதில் தவறாமல் வாக்கிங் செல்கிறவர்களுக்கு முதுமையில் உடல் உறுப்புகள் இயங்காமல் அவதிப்படும் பிரச்சினை வருவதில்லை. உடல் குறைபாடுகளும் வருவதில்லை. அதனால் வாக்கிங் செல்வது மிகவும் நல்லது.
Tags:    

Similar News