லைஃப்ஸ்டைல்
உடற்பயிற்சி

வீட்டில் உடற்பயிற்சி செய்பவர்கள் பொதுவாக செய்யும் தவறுகள்

Published On 2020-12-15 02:12 GMT   |   Update On 2020-12-15 02:12 GMT
வீட்டில் பயிற்சி செய்வதால் இப்படித்தான் செய்ய வேண்டும் என இல்லாமல் உங்கள் சௌகரியத்திற்கு அந்தப் பயிற்சியை செய்தால் அதற்கு பலன் இருக்காது.
தற்போது கொரோனா காரணமாக பலரும் வீடுகளிலேயே வீடியோக்களை பார்த்து உடற்பயிற்சிகளை செய்து வருகின்றனர். அப்படி வீட்டில் செய்வோர் பலரும் பொதுவாக செய்யும் சில தவறுகள் என்னென்ன பார்க்கலாம்.

உடற்பயிற்சி செய்யும் முன் வார்ம் அப் செய்வது அவசியம். எடுத்தவுடன் பயிற்சியில் இறங்காமல் சில ஸ்ட்ரெட்சுகள் செய்வதால் உடல் நீங்கள் செய்யப்போகும் உடற்பயிற்சிக்குத் தயாராகும்.

உடற்பயிற்சி செய்யும் முன் எந்த மாதிரியான பயிற்சிகளை எடுக்கப் போகிறீர்கள், எத்தனை மணி நேரம் செய்யப் போகிறீர்கள், எந்த பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி செய்யப்போகிறீர்கள் என அனைத்தையும் திட்டம் போட்டு அதன் படி செய்தல் நல்லது.

வீட்டில் பயிற்சி செய்வதால் இப்படித்தான் செய்ய வேண்டும் என இல்லாமல் உங்கள் சௌகரியத்திற்கு அந்தப் பயிற்சியை செய்தால் அதற்கு பலன் இருக்காது. எனவே அந்த பயிற்சி நிலையை சரியாக செய்து வந்தால்தான் நன்மை கிடைக்கும்.

வீட்டில் அத்தனைக்கும் ஆசைப்படு என்பதுபோல் உடல் எடையைக் குறைக்க வேண்டிய ஆர்வத்தில் ஒர்க் அவுட், யோகா, நடைபயிற்சி என அனைத்தையும் ஒன்றாக செய்வார்கள். அவ்வாறு செய்யாதீர்கள். ஒரு நாளைக்கு ஒன்று என்று செய்யுங்கள். அதேபோல் ஆரம்பத்திலேயே ஹெவியாக செய்யாமல் சிறு சிறு ஒர்க் அவுட் பயிற்சிகளை மேர்கொள்ளுங்கள்.

பலரும் கார்டியோ பயிற்சி மட்டும் செய்வதால் உடல் எடையைக் குறைத்துவிடலாம் என கற்பனைக் கனவு காண்கின்றனர். எனவே அவ்வாறு இல்லாமல் அனைத்து வகையான பயிற்சிகளையும் மேற்கொள்வது உங்களின் ஒட்டுமொத்த உடலிற்கும் நல்லது.
Tags:    

Similar News