உடற்பயிற்சி பந்து வீட்டில் உடற்பயிற்சி செய்ய ஏற்ற உபகரணம் ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் உபயோகப்படுத்தி எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம்.
உடற்பயிற்சி பந்தை பயன்படுத்தி எப்படி பயிற்சி செய்யலாம்?
பதிவு: டிசம்பர் 03, 2020 07:45
உடற்பயிற்சி பந்தை பயன்படுத்தி எப்படி பயிற்சி செய்யலாம்?
இந்த பந்தானது அளவில் பெரியதாக இருக்கும். இது வீட்டில் உடற்பயிற்சி செய்ய ஏற்ற உபகரணம் ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் உபயோகப்படுத்தி எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம். வாங்குவதற்கு முன் விற்பனையாளரின் உதவியுடன் பந்தின் மேல் அமர்ந்து அவருடைய ஆலோசனையின் பேரில் தான் வாங்க வேண்டும்.
45 சென்டிமீட்டர் , 55 சென்டிமீட்டர் ,
65 சென்டிமீட்டர், 75 சென்டிமீட்டர்
என நான்கு அளவுகளிலும், பல வண்ண நிறங்களில் கிடைக்கிறது.
குழந்தைகள்
குழந்தைகள் யோகா செய்ய விரும்பாத பொழுது இந்த பந்தை வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தினால் ஆர்வம் கூடும்.
அவதான குறைபாடு (ADHD).
இக்குறைபாடு உள்ள குழந்தைகள், இப்பந்தினை உபயோகப்படுத்தி எளிய பயிற்சிகள் செய்வதன்மூலம் நோயின் தீவிரம் குறைய வாய்ப்பு இருக்கிறது.
இளைஞர்கள்
காலையில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள், இந்த பந்தின் மூலம் வீட்டிலேயே செய்து பயன் பெறலாம்.
முதியவர்கள்
வயதில் மூத்தவர்கள் இப்பந்தினை பயன்படுத்தி பயிற்சி செய்யும் பொழுது எவ்விதமான தசைப்பிடிப்போ மூட்டுவலியோ ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு. மேலும் வீட்டில் இருக்கும்பொழுது வசதியான நேரங்களில் செய்து பயன் பெறலாம்.
மன அழுத்தம்
நம்மில் பலருக்கும் மன அழுத்தம் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கிறது. அவ்வாறு நம் மனது சோர்வடையும் பொழுது, இப் பந்தின் மேலமர்ந்து எளிய பயிற்சிகளை செய்யலாம். மனது லேசானது போல் உணரலாம்.
Related Tags :