லைஃப்ஸ்டைல்
மூச்சுப்பயிற்சி

உடலின் வெப்பத்தை விரட்டும் மூச்சுப்பயிற்சி

Published On 2020-11-23 02:04 GMT   |   Update On 2020-11-23 02:04 GMT
உடலில் குளிர்ச்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக ஏ.சி. அறையில் நிறைய பேர் நேரத்தை செலவிடுவார்கள். மூச்சுப் பயிற்சி மூலமே வெப்ப தாக்கத்தை விரட்டிவிடலாம்.
உடலில் குளிர்ச்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக ஏ.சி. அறையில் நிறைய பேர் நேரத்தை செலவிடுவார்கள். குளிர்ந்த காற்றை வீசும் ஏர்குலர்களையும் பயன்படுத்துவார்கள். மூச்சுப் பயிற்சி மூலமே வெப்ப தாக்கத்தை விரட்டிவிடலாம். நாடி சோதன பிரணாயாமம், சிதாலி பிரணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

சிதாலி பிராணாயாமம் எளிது. நாக்கின் பக்கவாட்டு பகுதிகளை லேசாக மடக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் நாக்கு வழியாக காற்றை உள்ளே இழுத்து சுவாசிக்க வேண்டும். வாய் வழியாக சுவாசக்காற்று தொண்டை பகுதியை அடையும்போது குளிர்ச்சி தன்மையை உணரலாம். அதன்பிறகு உதட்டை மூடிவிட்டு மூக்கு வழியாக சுவாசத்தை வெளியேற்ற வேண்டும். தொடர்ந்து ஐந்தாறு முறை இவ்வாறு செய்து வரலாம். நாக்கை மடக்கி மூச்சை உள் இழுக்க முடியாதவர்கள் வாயை லேசாக திறந்து கொண்டு பற்களின் வழியாக மூச்சுக்காற்றை உள் இழுக்கலாம். பின்னர் மூக்கு வழியாக வெளியேற்றலாம். இவ்வாறு செய்யும்போது வாய், தொண்டை பகுதி குளிர்ச்சி அடையும்.

சிங்கம் போன்று முகத்தை கர்ஜனை செய்யும் கோணத்தில் வைத்துக்கொண்டு மூச்சுப் பயிற்சி செய்யலாம். தரையில் அமர்ந்து மூச்சை உள் இழுத்தவாறு உதடுகள், கண்கள், மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து நாக்கை வெளியே நீட்டியபடி மூச்சை வெளியேற்ற வேண்டும். அப்போது கண்களை திறந்து கொண்டு அங்கும் இங்கும் பார்வையை சுழலவிட வேண்டும். இவ்வாறு தினமும் சில முறை செய்து வரலாம்.
Tags:    

Similar News