லைஃப்ஸ்டைல்
ஷீட்டலி பிராணாயாமம்

நுரையீரல் பிரச்சனைகளை குணப்படுத்தும் ஷீட்டலி பிராணாயாமம்

Published On 2020-11-10 02:11 GMT   |   Update On 2020-11-10 02:11 GMT
ஷீட்டலி பிராணாயாமம் சுவாசம் உடலினுள் சீராகப் பரவ உதவுகிறது. நுரையீரல் பிரச்சனைகள், சளி மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்தக்கூடியது. மன அமைதிக்கு உதவுகிறது.
பத்மாசன நிலையில் உட்கார வேண்டும். இரண்டு கைகளையும் சின் முத்திரையில் வைக்க வேண்டும். கண்கள் மூடிய நிலையில் நாக்கை வெளியே நீட்டி, உருளை போன்று உட்புறமாக மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது நாக்கின் வழியாக மூச்சை உள் இழுக்க வேண்டும். மூச்சை உள்ளே இழுத்ததும், நாக்கை உள்ளே கொண்டு செல்ல வேண்டும். பிறகு, பற்களின் வழியாக மூச்சை வெளியிட வேண்டும். இதேபோல் ஐந்து முறை செய்யலாம். இறுதியாக, இரண்டு கைகளின் உள்ளங்கைகளையும் தேய்த்து, கண்களில் வைக்க வேண்டும். பின்பு கண்களைத் திறக்க வேண்டும்.

பலன்கள்: உடல் குளிர்ச்சி அடைய உதவுகிறது. சுவாசம் உடலினுள் சீராகப் பரவ உதவுகிறது. நுரையீரல் பிரச்சனைகள், சளி மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்தக்கூடியது. மன அமைதிக்கு உதவுகிறது.
Tags:    

Similar News