லைஃப்ஸ்டைல்
ஐந்தாம் மாதம்: குழந்தையின் அசைவு தெரியும்..

ஐந்தாம் மாதம்: குழந்தையின் அசைவு தெரியும்..

Published On 2020-09-29 07:02 GMT   |   Update On 2020-09-29 07:02 GMT
பதினெட்டாவது வாரத்தில் குழந்தையின் அசைவை தாயால் உணர்ந்துகொள்ள முடியும். வயிறு பெரிதாகி, தாயின் உடல்எடையும் அதிகரிக்கும்.
பதினெட்டாவது வாரத்தில் குழந்தையின் அசைவை தாயால் உணர்ந்துகொள்ள முடியும். வயிறு பெரிதாகி, தாயின் உடல்எடையும் அதிகரிக்கும்.

பதினெட்டாவது வாரத்தில் குழந்தையின் அசைவை தாயால் உணர்ந்துகொள்ள முடியும். வயிறு பெரிதாகி, தாயின் உடல்எடையும் அதிகரிக்கும். மார்பகங்கள் பெரிதாகுவதோடு, காம்புகளை சுற்றியுள்ள பாகம் நன்றாக கறுப்பாகிவிடும். கர்ப்பிணிகளில் சிலருக்கு, காம்புகளில் இருந்து தண்ணீர் போன்ற திரவம் வெளிப்படும். அது இயற்கையானதுதான்.

* வயிறு சற்று பெரிதாகிவிடுவதால், நடையில் வித்தியாசம் தென்படும். அவ்வப்போது முதுகு வலிக்கும். கீழே விழுந்துவிடாத அளவுக்கு கவனமாக நடக்கவேண்டும்.

* அதிக நேரம் உட்காரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், முதுகுக்கு ஏதாவது தாங்கல்கொடுப்பது நல்லது.

* இடது பக்கமாக ஒருக்களித்து படுப்பது அவசியம். அப்படி செய்தால் கர்ப்பப்பைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

* 17 முதல் 20 வாரங்களில் குழந்தையின் அசைவு நன்றாக தென்படும். அவ்வப்போது தூங்கிவிடவும் செய்யும்.

* இந்த காலகட்டத்தில் குழந்தையின் சிறுநீர்ப்பை, விரைகள் இயங்கத் தொடங்கும். அதனால் குழந்தை சிறுநீர்கழிக்கும். 18-வது வாரத்தில் குழந்தை ஆணா, பெண்ணா என்பது தெரிந்துவிடும். ஆனால் பாலினத்தை டாக்டர் தெரிவிப்பது சட்டப்படி குற்றம்.

* ஐந்தாவது மாதத்தில் குழந்தை 27 செ.மீ. நீளம் கொண்டிருக்கும். 360 கிராம் எடை காணப்படும்.

* இந்த மாதத்தில் குழந்தையின் உடல் முழுவதும் மெல்லிய ரோமங்களால் பொதிந்திருப்பதை காணலாம். அது ‘லானுகோ’ என்று அழைக்கப்படுகிறது.

* லானுகோவுடன் வெள்ளை நிறத்தில் வெண்ணெய் போன்ற பொருள் உடலின் வெளிப்பகுதியில் காணப்படும். இவை இரண்டும் குழந்தையின் பாதுகாப்பு கவசம் போன்று செயல்படும்.

* ஐந்தாவது மாதத்தில் குழந்தையின் இதயத்துடிப்பை ஸ்டெதஸ்கோப் மூலம் கேட்கலாம்.

* ஒருவேளை குழந்தை ஏதாவது ஊனத்துடன் வளர்ந்துகொண்டிருந்தால் சட்டப்படி 20-வது வாரம் வரை அபார்ஷன் செய்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.

* இந்த மாதமும் இரும்புசத்து மற்றும் கால்சியம் சத்து மாத்திரைகளை உட்கொள்ளவேண்டும்.

* கர்ப்பிணியின் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் உடலில் உஷ்ணம் அதிகமாகும். நிறைய வியர்க்கவும் செய்யும். இதனால் ஜலதோஷம், மூக்கடைப்பு போன்றவை தோன்றக்கூடும்.

* வயிறு பெரிதாகிவிடுவதால் தளர்வான உடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும். உட்காரவும், எழுந்திருக்கவும் சவுகரியமான நிலைகளை கடைப்பிடிக்கவேண்டும்.

* வயிற்று குழந்தையின் இதயத் துடிப்பு அதிகரிப்பதால், கர்ப்பிணி தனது இதயத்துடிப்பை அதிகரிக்கும் விதத்திலான உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது. சவுகரியமான நிலையில் அமர்ந்து எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அறை காற்றோட்டமாக இருப்பது அவசியம்.

* ஐந்தாவது மாதத்தில் செய்யவேண்டிய ‘ஸ்கேன்’ மிக முக்கியமானது. குழந்தைக்கு ஊனம் ஏதாவது இருந்தால் அதை கண்டறிந்துவிடலாம்.

* சத்தான உணவுகள் அவசியம். கால்சியம் நிறைந்த உணவுகள் அதிகம் தேவை. பாதாம், யோகர்ட், பால், பாலாடைக்கட்டி, ஆரஞ்சு போன்றவைகளை உணவில் சேர்க்கவேண்டும். வயிற்றில் வளரும் குழந்தையின் எலும்பு, பற்கள் வளர்ச்சிக்கு கால்சியம் மிக அவசியம்.
Tags:    

Similar News