லைஃப்ஸ்டைல்
அதிகப்படியான உடற்பயிற்சி ஏற்படுத்தும் பாதிப்புகள்

அதிகப்படியான உடற்பயிற்சி ஏற்படுத்தும் பாதிப்புகள்

Published On 2020-09-15 02:19 GMT   |   Update On 2020-09-15 02:19 GMT
நீங்கள் அதிகப்படியாக உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் செயல்திறன் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது; மேலும் இவ்வாறு செய்வது உங்களின் முன்னேற்றத்தையும் குறைக்கும்.
அதிகப்படியான நோய்க்குறியைத் (ஓவர் ட்ரெய்னிங் சிண்ட்ரோம்) தடுக்க ஓய்வு நாட்கள் முக்கியம். ஓய்வு நாட்கள் அதிகப்படியான பயிற்சி நோய்க்குறியை தடுக்கலாம்; அல்லது தகர்க்கவும் கூடும். ஓர் சிலர் தங்களின் உடலை மீட்கும் திறனைத் தாண்டி பயிற்சி செய்யும் போது இது நிகழ்கிறது. அதிகப்படியான பயிற்சி, செயல்திறன் குறைவதற்கு கூட காரணமாக இருக்கலாம். மற்றும் அதன் முன்னேற்றத்தையும் குறைக்கலாம்.

உங்கள் உடலுக்கு போதுமான ஓய்வு நேரம் கொடுக்கவில்லை என்றால், அத்தகைய பயிற்சி முறையே உங்கள் செயல்திறனைக் குறைக்கக்கூடும். ஓய்வு இல்லாமல் உடற்பயிற்சி செய்வது அதிகப்படியான எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்:

குறுகிய காலத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பல பெண்கள் உடற்பயிற்சியை மிகைப்படுத்தி செய்து வருகின்றனர். ஆனால் அவர்கள் உணர மறுப்பது என்னவென்றால், உடல் குறைப்பு என்பது படிப்படியான செயல். படிப்படியாகவும் சீராகவும் உடல் எடையை குறைப்பவர், இறுதிவரை உடல் எடையை பராமரிப்பதில் மிகவும் வெற்றிகரமாக இருப்பார். அதாவது வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு பவுண்டுகள் வரை குறைத்தால் நன்று. மறுபுறம், போதுமான மீட்பு நேரம் இல்லாமல் அதிக தீவிரத்தில் அதிகமாக உடற்பயிற்சி செய்வது ஆச்சரியமான வழிகளில், உங்களுக்கே தெரியாமல் உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

அதிகப்படியான பயிற்சியின் விளைவாக, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் உணர்ச்சி நிலை காரணமாக ஏற்படும் குறைந்த வளர்சிதை மாற்றம், உண்மையில் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதிகப்படியான உடற்பயிற்சி மன அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும் இதன் விளைவாக ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி சுரப்பி மற்றும் அட்ரீனல் சுரப்பிகள் இடையே கடுமையான தவறான தகவல்தொடர்பு ஏற்படக்கூடும். இது சோர்வு, தூக்கமின்மை, குடல் பிரச்சினைகள் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற எதிர்மறையான உடல் விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

உடற்பயிற்சி செய்வது மூலம் ஏற்படக்கூடிய சில நன்மைகள் என்னவென்றால், உடற்பயிற்சி செய்வது மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது; உங்கள் இதயத்தை பலப்படுத்துகிறது; உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது; உடற்பயிற்சி செய்வதால் நீங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மேலும், வழக்கமான உடற்பயிற்சி, இரத்த அழுத்தத்தை குறைக்க வல்லது; மற்றும் கொழுப்பின் அளவையும் குறைக்க உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஒழுங்கான முறையில் உடற்பயிற்சி செய்து வருவது நல்லது.

நீங்கள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் உடற்பயிற்சி செய்து வந்தால் கூட அது போதுமானது. எனவே, அவரவர் உடல் நலத்திற்கு ஏற்றவாறு உடற்பயிற்சி செய்து நன்மை பெறுங்கள்!
Tags:    

Similar News