பெண்கள் உலகம்
உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்ய ‘மூடு’ வரவில்லையா? அப்ப இதை செய்யுங்க...

Published On 2020-08-27 08:43 IST   |   Update On 2020-08-27 08:43:00 IST
உடற்பயிற்சி செய்வது என்பது பெரிய கஷ்டமான விஷயம் இல்லை. தினம்தோறும் நாம் 20 நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும். உடற்பயிற்சியை செய்ய முடியும்.
பெரும்பாலான மக்களிடம் இருக்கக்கூடிய ஒரே பிரச்சனை தினம் தோறும் உடற்பயிற்சியை முறையாக செய்ய முடியவில்லை என்பது தான். வேகமாக இருக்கக்கூடிய உலகத்தில், உடலை ஆரோக்கியமாக வைக்கவும், உடற்பயிற்சிகள் செய்யவும் மக்களுக்கு ஏது நேரம் என்று மனக்குப்பத்திலேயே வாழ்கின்றனர்.

எல்லா மக்களின் மனநிலையும் அப்படித்தான் இருக்கின்றது. நமக்கு வேலையே சரியாக இருக்கின்றது. இதில், உடற்பயிற்சிகள் வேறு செய்ய வேண்டும்.

ஆனால், உடற்பயிற்சி செய்வது என்பது பெரிய கஷ்டமான விஷயம் இல்லை. தினம்தோறும் நாம் 20 நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும். உடற்பயிற்சியை செய்ய முடியும். அதற்கு சில வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் போதும்.

நீங்கள் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். அதற்கான சில டிப்ஸ்களை பார்ப்போம் அல்லது இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.

எப்போதும் உற்சாகமாக இருங்கள் – உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் நீங்கள் ஏதோவொரு வேலைகளை செய்து கொண்டிருப்பீர்களென்றால், அதை நீங்கள் உடற்பயிற்சியாக மாற்றலாம்.

அதாவது, நீங்கள் பக்கத்தில் உள்ள வேலைகளுக்கு செல்லும் பொழுது, படிக்கட்டுகளில் ஏறும் வாய்ப்பு கிடைத்தால் அதையே பயன்படுத்துங்கள். அதுவும் உங்களுக்கு உடற்பயிற்சிதான்.

நடப்பதையே தேர்வு செய்யுங்கள் – பெரும்பாலான சின்ன சின்ன வேலைகளுக்கும் நடந்து செல்வதையே வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஜாக் செய்யுங்கள் – நீங்கள் சும்மா இருக்கும் நேரம் ஜாக் செய்யுங்கள். தினமும் இதை செய்யலாம். ஜாக் செய்வது பெரிய விஷயமல்ல. நின்ற இடத்திலேயே செய்யலாம்.

வெயிட் தூக்குங்கள் – வீட்டில் உள்ள ஏதும் கனமான பொருட்களை தூக்கி பழகுங்கள். அது உங்களுடைய கைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். இதுபோன்ற சின்ன சின்ன வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். அதுவே, உங்களுக்கான சிறிய உடற்பயிற்சிகளாகும்.

Similar News