பெண்கள் உலகம்
சுரபி முத்திரை

நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண்கள் குணமடைய உதவும் முத்திரை

Published On 2020-08-20 08:47 IST   |   Update On 2020-08-20 08:47:00 IST
செரிமானச் செயல்பாட்டைச் சீரமைத்து, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமடைய உதவுகிறது. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
சுரபி முத்திரையின் மற்றொரு பெயர் `காமதேனு முத்திரை.’ இதில் பஞ்ச பூதங்களும் மாறி மாறித் தூண்டப்படுவதால், காரணம் தெரியாத பல்வேறு நோய்கள் குணமாகின்றன. உடலில் உள்ள குணமாக்கும் சக்திகள் தூண்டப்படுகின்றன.

செய்முறை :

விரிப்பின் மீது சப்பணம் இட்டு அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றிச் செய்ய வேண்டும். இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று இணைப்பதுபோல வைக்கவும்.

ஸ்டெப் 1:  நடு மற்றும் ஆள்காட்டி விரல் ஒரு குரூப், சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல் ஒரு குரூப். கட்டை விரல் தனி என பிரித்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 2:  இடது கை ஆள்காட்டி விரல் நுனியால் வலது கை நடுவிரலைத் தொட வேண்டும். இடது கை நடு விரல் நுணியால் வலது கை ஆள்காட்டி விரலைத் தொட வேண்டும்.

ஸ்டெப் 3:  இடது கை சுண்டு விரல் நுனியால் வலது கை மோதிர விரலைத் தொட வேண்டும். இடது கை மோதிர விரல் நுனியால் வலது கை சுண்டு விரலைத் தொட வேண்டும். கட்டை விரல்களை எதனுடனும் சேர்க்காமல், நெஞ்சைப் பார்த்தபடி நீட்ட வேண்டும்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை என ஒவ்வொரு முறையும் 10-20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

பலன்கள் :

வாதநோய் குணமாகும். அதிகப்படியான உடல் வெப்பம் குறையும்.

தைராய்டு, பிட்யூட்டரி, அட்ரினல் போன்ற நாளமில்லாச் சுரப்பிகள், நரம்பு முடிச்சுகள் தூண்டப்பட்டு அவற்றின் குறைபாடுகள் நீங்குகின்றன.

கௌட்’ எனப்படும் வாதநீர் தேக்கத்தையும், ரூமேட்டிசம் (Rheumatism) எனப்படும் மூட்டு நோய்த் தாக்கத்தையும் குறைக்கும்.

செரிமானச் செயல்பாட்டைச் சீரமைத்து, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமடைய உதவுகிறது.

மனதை அமைதிப்படுத்த விரும்புகின்ற ஒருவருக்கு அதற்கு முதலில் சிந்தனை தெளிவாகி உயர்ந்த எண்ணங்கள் மனதி உருவாக இந்த முத்திரை பயன்படும்.

Similar News