லைஃப்ஸ்டைல்
மாதங்கி முத்திரை

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் யோக முத்திரை

Published On 2020-08-17 03:05 GMT   |   Update On 2020-08-17 03:05 GMT
இந்த யோக முத்திரையை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு வெகுவாக குறையும். அதனால், சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இதைத் தொடர்ச்சியாக செய்யக் கூடாது.
உணவு முறை பழக்கத்தாலும், தேவையில்லாத டென்ஷனை மனசுக்கு ஏத்திக்கிறதாலேயும் இன்னைக்கு முப்பது வயசை தாண்டினாலே பாதி பேர், ‘எனக்கு சுகர் இருக்கு’ன்னு சொல்றாங்க. அப்படி சர்க்கரை நோய் இருக்கிறவங்க செய்றதுக்காகவே மாதங்கி முத்திரை இருக்கு. இந்த யோக முத்திரையை தினமும் சர்க்கரை நோய் இருக்கிறவங்க செய்து வரலாம். இந்த முத்திரையைத் தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

நல்ல காற்றோட்டமான இடத்தைத் தேர்வு செய்துக் கொண்டு, இரு கைகளையும் கோர்த்தவாறு இடதுகை பெருவிரல் மீதும்,  வலதுகைப் பெருவிரல் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். இப்போது, உங்களின் இரு நடு விரல்களையும் நேராக நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு இருக்கச் செய்யவும்.

தினமும் காலை, மாலை 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரையில் செய்யலாம்.  இந்த யோக முத்திரையை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு வெகுவாக குறையும். அதனால், சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இதைத் தொடர்ச்சியாக செய்யக் கூடாது.
Tags:    

Similar News