லைஃப்ஸ்டைல்
பிராணாயாமம்

பிராணாயாமம் என்னவெல்லாம் செய்யும்?

Published On 2020-07-15 03:21 GMT   |   Update On 2020-07-15 03:21 GMT
பிராணாயாமம் உங்கள் சுவாசத்தோடு தொடர்புடைய முக்கியமான சக்தியான பிராணசக்தியைத் தீவிரப்படுத்தி, நெறிப்படுத்துகிறது. பிராணாயாமம் உங்களை ஆரோக்கியமாக, துடிப்பாக, விழிப்புடையவராக ஆக்குகிறது.
மூச்ச சும்மா இழுத்து விட்டுட்டா பெருசா என்ன நடந்திரும்? இப்படிப் பிராணாயாமத்தை சாதாரணமாகப் பார்க்கும் நிலை பரவலாக உள்ளது. யோகாவின் அடிப்படைக் கொள்கைகள் உங்களது மனதை ஒரு குறிப்பிட்ட வகையில் தயார்படுத்தி, முதிர்ச்சியடைய வைக்கும். யோக ஆசனங்கள், உங்கள் உடல் உயர்ந்தநிலைசக்திகளை பெறுவதற்கு உதவி செய்யும். பிராணாயாமம் உங்கள் சுவாசத்தோடு தொடர்புடைய முக்கியமான சக்தியான பிராணசக்தியைத் தீவிரப்படுத்தி, நெறிப்படுத்துகிறது.

பிராணாயாமம் உங்களை ஆரோக்கியமாக, துடிப்பாக, விழிப்புடையவராக ஆக்குகிறது. ஆனால் அத்துடன் அதன் பயன்கள் முடிந்துவிடவில்லை. அது உங்களை ஒரு உயர்ந்த நிலை அனுபவத்துக்கு மெதுவாகவும் இயல்பாகவும் நகர்த்திச் செல்கிறது. அது உங்கள் வாழ்க்கை அனுபவத்தையே மாற்றிவிடும் ஒரு கருவியாகும். பிராணாயாமா உங்களை உங்களது உடலின் கட்டுப்பாடுகளைத் தாண்டி, உங்கள் உள்ளே அடியாழத்தில் இருக்கும் உள்பரிமாணத்தை உணரச் செய்கிறது. பிராணாயாமா சுய விழிப்புணர்வை அடைவதற்கான ஒரு முழுமையான பாதை.

மனித உடலில் ஐந்து வகையான வாயுக்கள் உயிர் உள்ளவரை செயலாற்றுகின்றன. அவற்றுக்கு பிராணம்- உதானம்- வியானம்- ஸமானம்- அபானம் என்று பெயர். பிராணவாயு தலையைத் தங்குமிடமாகக் கொண்டது. தொண்டையிலும் மார்பிலும் உலவுகின்றது. அறிவு, புலன்கள், இதயம், மனம், நாடிகள் இவற்றை நிலை நிறுத்தச் செய்கிறது. துப்புதல், தும்மல், ஏப்பம், உள்ளிழுக்கும் மூச்சு, வெளிவிடும் மூச்சு, உணவை உட் செலுத்துதல் ஆகியவை இதன் செயல்களாகும்.

உதான வாயு மார்பில் இருந்து கொண்டு தொண்டை மூக்கு முதல் தொப்புள் வரை உலவும். பேசுதல், செயலில் முயற்சி, புஷ்டி, வலிவு, நிறம், உடல் உட்புறக் குழாய்களை தெளிவாக வைத்திருத்தல், அறிவு, தைரியம், நினைவாற்றல், மனதிற்கு உணர்வுகளைத் தெரிவித்தல் ஆகியவை. சரியான முறையில் பிராணாயாமம் செய்பவர்களுக்குப் பிராணவாயுவின் செயல்திறன் மேம்பட்டு அவர்களின் அறிவுக் கூர்மை, மனதை ஒருமுகப்படுத்துதல் போன்ற திடமான உள்ளத்தை அவர்கள் அடைந்திருப்பதைக் காண முடிகிறது.
Tags:    

Similar News