லைஃப்ஸ்டைல்
ஸ்கந்தசனா

மைக்ரேன் தலைவலியை குணமாக்கும் ஸ்கந்தசனா

Published On 2020-07-01 03:36 GMT   |   Update On 2020-07-01 03:36 GMT
மைக்ரேன் தலைவலிக்கு​ ஸ்கந்தசனம் (கடவுளை நோக்கிய நிலை) நல்ல பலனைத்தரும். இந்த ஆசனத்தை பாலாசனம் என்று சொல்லுவார்கள். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
மைக்ரேன் தலைவலிக்கு, வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தத்தைக் கையாளும் வழிமுறைகளைப் பின்பற்றுவது மட்டுமே தீர்வு. மருந்துகளால், எந்த பலனும் கிடையாது. நீண்ட நாட்களாக வலி நிவாரணிகளை எடுப்பதால், பக்க விளைவுகளின் பாதிப்புகள் இருக்கும்.

மைக்ரேன் பிரச்சனைக்கு, யோகாசனம் மிகச் சிறந்த தீர்வாக இருப்பது, சர்வதேச அளவில் செய்த ஆய்வில், உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கென்றே பிரத்யேகமாக உள்ள பாலாசனத்தை பயிற்சி பெற்ற யோகா ஆசிரியரிடம், முறையாக கற்று தொடர்ந்து செயததில், சில வாரங்களில், நல்ல பலன் தெரியும்.

இந்த ஆசனத்தை, வாரத்திற்கு ஐந்து நாட்கள், தினமும், 30 நிமிடங்கள் செய்தால், படிப்படியாக வலியின் தீவிரம், தன்மை குறைந்து, வாரத்திற்கு இரண்டு நாட்கள் வருவது, ஒரு நாள், அதன் பின், மாதம் ஒரு நாள் என்று, எண்ணிக்கை குறைவது, தெரிய வந்துள்ளது.

இந்த ஆசனம் செய்ய உங்க கால்களை அகலமாக விரித்து நில்லுங்கள். உங்க இடது முழங்காலை மடக்கி உங்க இடுப்பை இடது பக்கமாக திருப்பி கொள்ளுங்கள். அதே நேரத்தில் வலது காலை முழுவதுமாக நீட்ட வேண்டும். இடது முழங்காலை உங்க இடுப்பு உயரத்திற்கு வைக்க வேண்டும். பிறகு இரண்டு உள்ளங்களையும் முன்னே தரையில் ஊனிக் கொள்ளுங்கள். இடுப்பு உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். இதே மாதிரி 3 தடவை செய்யுங்கள். அந்த காலிற்கு மாற்றி செய்யுங்கள். 
Tags:    

Similar News