லைஃப்ஸ்டைல்
கந்தராசனம்

இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை தரும் ஆசனம்

Published On 2020-06-26 03:21 GMT   |   Update On 2020-06-26 03:21 GMT
கந்தராசனம் இடுப்பு, முதுகு, வயிறு மற்றும் இனப்பெருக்க உறுப்புகளுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை தரக்கூடியவை. இன்று இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
விரிப்பில் நேராக படுத்துக்கொண்டு, கை, கால்களை உடம்பை விட்டு தள்ளி வைத்துக்கொள்ள வேண்டும். 5-15 முறை மூச்சை இழுத்து விட வேண்டும். இரு கால்களையும் சேர்த்து வைத்து, மடக்கி குதிகால்கள் தொடைப் பகுதியை தொடுவதுபோல் வைக்க வேண்டும்.

இரு கைகளாலும் கால்களைப் பிடித்துக்கொள்ள வேண்டும். மூச்சை பொறுமையாக உள்ளே இழுத்துக்கொண்டு இடுப்பு, முதுகு பகுதியை மட்டும் மேலே தூக்க வேண்டும். கழுத்து, தலை, தோள்பட்டை, புஜம், உள்ளங்கால் ஆகியவை தரையில் இருக்கும். இதுதான் கந்தராசனம்.

பின்னர், மூச்சை மெதுவாக வெளியே விட்டபடியே முதுகு, இடுப்பு பகுதியை கீழே இறக்க வேண்டும். பிறகு, கால்களையும் கீழே இறக்க வேண்டும். உடலைத் தளர்த்தி சாந்தி ஆசனத்துக்கு வரவேண்டும். தலா 10 எண்ணிக்கையில் 3-5 முறை இந்த ஆசனம் செய்யலாம்.

இந்த ஆசனம் இடுப்பு, முதுகு, வயிறு மற்றும் இனப்பெருக்க உறுப்புகளுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை தரக்கூடியவை. இடுப்பு, முதுகு பகுதிகள் வளைந்துகொடுப்பதோடு, நன்கு வலுப்பெறும்.

வெர்டிகோ, உயர் ரத்த அழுத்தம், முதுகுவலி, இதய நோய் உள்ளவர்கள் இவற்றை செய்யக்கூடாது. 
Tags:    

Similar News