பெண்கள் உலகம்
உத்தனாசனம்

மனஅழுத்தம், தலைவலியை குணமாக்கும் ஆசனம்

Published On 2020-05-29 10:31 IST   |   Update On 2020-05-29 10:31:00 IST
உத்தனாசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் மூளைக்கு அமைதி ஏற்பட்டு மனஅழுத்தம் மனப்பதற்றம் குறைகிறது. மெனோபாஸால் ஏற்படும் தலைவலி போன்ற அறிகுறிகள் குறைகின்றன. தலைசுற்றல் மயக்கம் குறைகிறது.
செய்முறை

கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு தரையில் கால்களை நன்றாக ஊன்றி நேராக நிற்க வேண்டும். இப்போது மூச்சை வெளியேற்றியவாறு இடுப்பை வளைத்து மெதுவாக தலையை குனியுங்கள். கால்கள் வளையாமலும் வயிறு தொடைகளில் அழுந்தி இருக்குமாறும் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது கைகளை கால்களுக்கு பக்கவாட்டில் கொண்டுவந்து தரையில் ஊன்றி நிற்க வேண்டும். தலை உள்பக்கமாக பார்த்து இருக்க வேண்டும். இந்த நிலையில் 10 வினாடிகள் தொடர வேண்டும்.

நன்மைகள்

மூளைப்பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் மூளைக்கு அமைதி ஏற்பட்டு மனஅழுத்தம் மனப்பதற்றம் குறைகிறது. இதனால் தலைவலியிலிருந்து விடுதலை. சிறுநீரகம் மற்றும் கணையத்தை சீராக்குகிறது. பின் கால் கெண்டைக்கால் மற்றும் இடுப்பு தசைகள் விரிவடைகின்றன. தொடை இடுப்பு தசைகள் வலுவடைகின்றன.

செரிமானம் தூண்டப்படுகிறது. மெனோபாஸால் ஏற்படும் தலைவலி போன்ற அறிகுறிகள் குறைகின்றன. தலைசுற்றல் மயக்கம் குறைகிறது. அமைதியான தூக்கம் பெறலாம். ஆஸ்துமா உயர் இரத்த அழுத்தம் மலட்டுத்தன்மை மூட்டுவலி மற்றும் சைனஸ் நோய்களுக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது.

Similar News