பெண்கள் உலகம்
சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரத்தை எப்போது செய்ய வேண்டும்

Published On 2020-05-22 09:39 IST   |   Update On 2020-05-22 09:39:00 IST
சூர்யோதய நேரத்தில், கையைக் காலை முன்னும் பின்னும் வளைத்து, சூரியநமஸ்காரம் செய்தால் உடலின் அனைத்து அவயங்களும் புத்துணர்வு பெறும். மாலையில் சூரியன் மறையும் நேரத்திலும் இதைச் செய்யலாம்.
கண்களை மூடி, கைகளில் சின்முத்திரை வைத்து (கட்டை விரல் நுனியும் ஆள்காட்டி விரல் நுனியும் ஒன்றை ஒன்று தொட்டபடி மற்ற விரல்கள் நீண்டிருக்கும் நிலை) 10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும். இது யோகா செய்வதற்கு முன் மனதை ஓய்வுபெறச் செய்யும்.

எப்போது செய்யவேண்டும்…

அதிகாலையில் அல்லது இளங்காலையில் எழுந்து செய்யவேண்டும். சூரியன் உதிக்கும்போது (5.30 மணி முதல் 6.30 மணிக்குள்) செய்வது மிகவும் நல்லது. சூர்யோதய நேரத்தில், கையைக் காலை முன்னும் பின்னும் வளைத்து, சூரியநமஸ்காரம் செய்தால் உடலின் அனைத்து அவயங்களும் புத்துணர்வு பெறும். மாலையில் சூரியன் மறையும் நேரத்திலும் இதைச் செய்யலாம்.

. வயிறு காலியாக இருக்கவேண்டும். எந்த உணவும் இருக்கக் கூடாது.

. வலது காலை முன்புறம் வைத்து, பின்புறம் வைப்பது, பிறகு இடது காலை அதே போல் செய்வது - இதை ஒரு முறை என்று வைத்துக்கொண்டால், இதே போல் 6 முறை செய்யலாம்.

. காலையில் 6 முறை, மாலையில் 6 முறை செய்தால், வேறு எந்த மருந்து, மாத்திரைகளோ, உடற்பயிற்சியோ தேவையே இல்லை.

. அனைத்து ஆசனங்களின் பலன்களையும் ஒருங்கே தரக்கூடியது. மற்ற ஆசனங்களைச் செய்ய நேரம் இல்லை என்றாலும் கூட, இது ஒன்றைச் செய்தாலே போதுமானது.

. எந்த உபகரணமும் இன்றி, எடையைக் குறைக்க மிகவும் உதவும் பயிற்சி.

. மிகவும் வயது முதிர்ந்தவர்களும், தள்ளாட்டம் உள்ள பெரியவர்களும் செய்யக் கூடாது. மிகவும் களைப்பாக இருக்கும்போது செய்யாதீர்கள். காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடல் வலி இருந்தாலும் தவிர்க்க வேண்டும். அந்தச் சமயத்தில் சவாசனம் அல்லது சாந்தி ஆசனத்தில் படுத்து எழவேண்டும்.

யோகா முடிந்ததும்…

ஒய்வு: தரை விரிப்பின் மேல் சப்பளங்கால் போட்டு, கைகளில் வணக்கம் வைத்து மூன்று முறை ‘ஆம்’ சப்தம் (ஆஆ… உஉ… ம்ம்…) சொல்லி, ‘சாந்தி… சாந்தி… சாந்தி’ என்று மூன்று முறை உச்சரித்து, பயிற்சியை முடிக்க வேண்டும்.

Similar News