லைஃப்ஸ்டைல்
உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்பவர்கள் கண்டிப்பாக வாம் அப், ஸ்ட்ரெச்சிங் செய்ய வேண்டுமா?

Published On 2020-05-19 05:28 GMT   |   Update On 2020-05-19 05:28 GMT
உடற்பயிற்சிக்கு முன்பு எப்படி வாம் அப் அவசியமோ அதேபோல உடற்பயிற்சிக்கு பின்பும் ஸ்ட்ரெச்சிங் அவசியம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஸ்ட்ரெச்சிங்... ஜிம்முக்கு செல்பவர்கள் இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவதை நீங்கள் காணலாம். ஸ்ட்ரெச்சிங் என்றால் என்ன? வாம் அப் க்கும் ஸ்ட்ரெச்சிங்க்கும் என்ன வித்தியாசம்? ஸ்ட்ரெச்சிங் செய்வதன் பயன் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

இப்போதும் எடுத்தவுடனேயே உடற்பயிற்சியை மேற்கொள்ள கூடாது நமது உடல் நார்மலாக இருக்கும்போது திடீரென்று உடற்பயிற்சி செய்வதால் தசைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் அதனால் உடற்பயிற்சிக்கு முன்பு warm-up என்று சிலவற்றை செய்ய வேண்டும் அப்போதுதான் தசைகள் நமது உடல் உடற்பயிற்சிக்கு தயாராகும் சரி அப்போது ஸ்ட்ரெச்சிங்?

நல்ல உடற்பயிற்சி செய்தவுடன் உடனே உணவையோ குளிர் பானத்தையோ அல்லது ரெஸ்ட் எடுப்பதோ கூடாது. உடற்பயிற்சிக்கு முன்பு எப்படி warm-up அவசியமோ அதேபோல உடற்பயிற்சிக்கு பின்பும் ஸ்ட்ரெச்சிங் அவசியம். ஏனென்றால் உடற்பயிற்சி செய்ததனால் ரத்த அழுத்தம் , இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும். உடலைக் கூல் டவுன் செய்ய ஸ்ட்ரெச்சிங் செய்ய வேண்டும். மேலும் உடற்பயிற்சி செய்யாதவர்கள்கூட உடலை வலுவாக்குவதற்கும் தடைகளை உறுதியாக்குவதற்கும் ஸ்ட்ரெச்சிங்கை தினமும் செய்யலாம்.

காலையில் எழுந்தவுடன் ஸ்ட்ரெட்சிங் செய்வதால் அசௌகரியத்தால் ஏற்படும் முதுகுவலி குணமடையும். பைக் ஓட்டுபவர்கள் கூட்ட நெரிசலில் பயணம் செய்பவர்கள் உடலைப் பயன்படுத்தி வேலை செய்பவர்கள் கண்டிப்பாக அதிகாலையில் ஸ்ரெச்சிங் செய்யுங்கள்.

தினமும் ஸ்ட்ரெச்சிங் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகுகிறது.மனதை ஒருநிலைப்படுகிறது. தினமும் மூச்சுப் பயிற்சியுடன் செய்யும்போது மன அழுத்தம் படிப்படியாக குறைகிறது பொறுமை அதிகரிக்கிறது.

முதுகெலும்பை வலுப்பெற செய்கிறது இதனால் நரம்பு பிரச்சனைகள் குறைகிறது. தினமும் செய்வதன் மூலம் உடலுக்கு flexibility கிடைக்கிறது. இப்போதெல்லாம் தரையில் உட்கார சிலருக்கு முடிவதில்லை இந்தியன் டாய்லெட்டில் உட்காருவதற்கு சிரமப்படுகிறார்கள் கிட்டத்தட்ட யோகா போல ஸ்ட்ரெச்சிங் உடலுக்கு நெகிழ்வுத் தன்மையை கொடுக்கிறது இவ்வளவு நன்மை தரும் இதனை தினமும் ஒரு 15 நிமிடம் செய்யலாமே?

Tags:    

Similar News