லைஃப்ஸ்டைல்
ஆகர்ண தனுராசனம்

முதுகு, தோள் பட்டை வலியை குறைக்கும் ஆகர்ண தனுராசனம்

Published On 2020-04-28 04:20 GMT   |   Update On 2020-04-28 04:20 GMT
இந்த ஆசனத்தை செய்வதால் முதுகில் ஏற்படும் இறுக்கம் வலியை குறையும். ஞாபகச் சக்தி நன்கு தூண்டப்படுகிறது. தோள்பட்டை வலி குறைகிறது.
வில்லிலிருந்து அம்பை இழுப்பது போன்ற நிலை.

செய்முறை :

விரிப்பில் கால்களை முன்புறம் நீட்டியவாறு அமர்ந்து கொள்ளவும். இடது கையால் வலது காலின் கட்டை விரலை பிடித்து இழுத்து மார்புக்கு அருகில் அணைத்துக் கொள்ள வேண்டும். பின் வலது கையால் இடது காலின் கட்டை விரலை பிடிக்க வேண்டும்.

வலது காலின் விரல்களை இடதுபக்க செவிக்கருகில் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். கண் பார்வையை ஒரே இடத்தில் வைக்க வேண்டும். சிறிது நேர ஆழ்ந்த சுவாசத்திற்கு பின் மெதுவாக வலது காலை விலக்கி சாதாரண நிலைக்கு வர வேண்டும். பின் கால்களை மாற்றி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பக்கமும் மூன்று முறை செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் 25 முதல் 30 வினாடிகள் செய்யலாம்.

முதுகெலும்பு சிப்பி விலகல் இடுப்பு கூடு பிரச்சனை உள்ளவர்கள் தகுந்த யோக நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் செய்வது உத்தமம்.

பயன்கள் :

நெஞ்சுப்பகுதி நன்கு விரிந்து நுரையீரல் நன்கு வேலை செய்து சுவாச மண்டல பிரச்சனைகள் சரியாகிறது. புஜங்கள் பலமாகிறது.

முதுகில் ஏற்படும் இறுக்கம் குறைகிறது. ஞாபகச் சக்தி நன்கு தூண்டப்படுகிறது. தோள்பட்டை வலி குறைகிறது.
Tags:    

Similar News