லைஃப்ஸ்டைல்
உடற்பயிற்சி

அதிக உடற்பயிற்சியா..?

Published On 2020-04-25 03:01 GMT   |   Update On 2020-04-25 03:01 GMT
ஒரு நாளைக்கு 90 நிமிடங்களுக்கு மேல் சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்பவர்களின் மனநலனில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதய நோய்கள், உடல் பருமன், பக்கவாதம், நீரிழிவு போன்றவற்றில் இருந்து விடுபட அல்லது அவற்றின் தாக்கத்தைக் குறைக்க உடற்பயிற்சி பெரிதும் உதவுகிறது. மிதமான உடற்பயிற்சிகள், நடைபயிற்சி போன்றவை மனதுக்கு இதமளிப்பதாகவே கூறப்படுகிறது.

ஆனால் ‘தி லான்செட் சைக்கியாட்ரி’ என்ற இதழில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று, உடற்பயிற்சி, மனநலம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு பற்றிக் குறிப்பிட்டுள்ளது. அதில், ஒரு நாளைக்கு 90 நிமிடங்களுக்கு மேல் சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்பவர்களின் மனநலனில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனதில் உடற்பயிற்சி ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்யும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட 12 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, உடற்பயிற்சியின் வகை, உடற்பயிற்சி செய்யும் நேர அளவு, எவ்வளவு நேர இடைவெளியில் உடற்பயிற்சி செய்யப்படுகிறது, எவ்வளவு தீவிரமாக உடற்பயிற்சி செய்யப்படுகிறது என்பது போன்ற தகவல்கள் திரட்டப்பட்டன.

உடற்பயிற்சியில் ஈடுபடுவோர், ஈடுபடாதவர்கள் ஆகியோரின் மனநிலை பற்றிய தகவல்களும் சேகரிக்கப் பட்டன. மிகத்தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவோரின் மனநிலையில் ஒரு சலனத்தன்மை ஏற் படுவதாக அந்த ஆய்வில் தெரியவந்தது.
Tags:    

Similar News