லைஃப்ஸ்டைல்
ஜானுசீராசனம்

சிறுநீரகம், பித்தப்பையில் கற்களா? இந்த ஆசனம் செய்யலாம்

Published On 2020-04-21 05:20 GMT   |   Update On 2020-04-21 05:20 GMT
ஒழுங்காக இந்த யோகா பயிற்சி செய்து, மனிதனுக்குரிய ஒழுக்க நெறியுடன் வாழ்ந்தால் இந்த சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் எல்லாம் நமக்கு வரவே வராது.
அந்தக் காலத்தில் வாழ்ந்த நம் சித்தர்கள், மனித உடற்கூறுகளை நன்கு ஆராய்ந்து ஒவ்வொரு உள்உறுப்பிலும் ஏற்படும் தேக்கங்கள், கழிவுகள் தங்காமல் இயங்க எப்படி உடலை வளைக்க வேண்டும் என்பதை வடிவமைத்துள்ளார்கள். அதனை நாம் ஒழுங்காகப் பயிற்சி செய்து, மனிதனுக்குரிய ஒழுக்க நெறியுடன் வாழ்ந்தால் இந்த சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் எல்லாம் நமக்கு வரவே வராது.

செய்முறை

விரிப்பில் அமரவும். வலது காலை மடித்து இடது தொடை அருகில் படும்படி வைக்கவும். இடது காலை நேராக நீட்டவும். கைகளை உயர்த்தி இரு கைகளையும் கொண்டு இடது கால் பாதத்தை தொடவும். தலையை இடது காலின் முட்டியில் நெற்றி படும்படி செய்யவும். சாதாரண மூச்சில் 20 வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக எழுந்துவிடவும். இதே போல் மாற்றி செய்யவும். இரண்டு முறைகள் செய்யவும்.

முதலில் பயிற்சி செய்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பயிலவும். எடுத்தவுடன் இரு கைகளால் கால் பெருவிரலை தொட முடியாது. நெற்றியும் கால்முட்டியில் படாது. கவலை வேண்டாம். எவ்வளவு குனிய முடியுமோ குனிந்து அந்த நிலையில் 10 முதல் 20 வினாடிகள் இருக்கவும். தொடர்ந்து ஒரு மாதம், அல்லது இரண்டு மாதம் பயிற்சி செய்ய, வளையும் தன்மை தானாக வரும். இந்தக் கோணத்தில் காலை மடித்து அமர்ந்தாலே, சிறுநீரகக்கற்கள், தானாகவே கரைந்து வெளியேறும்.

இந்த ஆசனத்தை தினமும் ஐந்து நிமிடம் காலை, மாலை சாப்பிடும் முன்பு வெறும் வயிற்றில் பயிற்சி செய்ய வேண்டும்.

அடி முதுகுவலி, முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம். அல்லது தகுந்த யோக வல்லுநரின் ஆலோசனைப்படி செய்யவும்.
Tags:    

Similar News