லைஃப்ஸ்டைல்
பரிபூரண நவாசனம்

பூரண நலம் தரும் பரிபூரண நவாசனம்

Published On 2020-03-07 03:12 GMT   |   Update On 2020-03-07 03:12 GMT
இந்த ஆசனம் முகத்திலுள்ள எல்லா தசைகளும் நன்கு பளபளப்பாக இருக்க உதவுகின்றது. முகம் முழுவதும் ரத்த ஓட்டம் சிறப்பாக பாயும். முகமலர்ச்சியை தருகின்றது.
மனிதனாகப் பிறந்தவன் வாழ்க்கையை அருமையாக வாழ வேண்டுமெனில் அதிகாலை எழவேண்டும். இல்லையேல் வாழ்வு எருமைபோல் மந்தமாகிவிடும். அதிகாலை எழுவதற்கு ஒரே வழி யோகாசனத்தை தினமும் முறைப்படி பயில்வது தான். பரிபூரண நவாசனம் செய்தால் மனமும் உடலும் வளமாகும். பரிபூரண ஆரோக்கியத்தை வாழ்வில் பெறலாம்.

பரிபூரண நவாசனம் செய்முறை

* விரிப்பில் நேராகப் படுக்கவும்.

* இரு கைகளையும் தலைக்கு பின்னால் நீட்டி வைக்கவும்.

* இப்பொழுது மூச்சை இழுத்துக் கொண்டே காலையும் கையையும் உயர்த்தவும். கைகளை முதலில் கால் பெருவிரல் நோக்கி கொண்டு வரவும்.

* பின் இரு கைகளையும் இரு கால்களுக்கு அடியில் கும்பிட்ட நிலையில் படத்திலுள்ளது போல் சேர்க்கவும். இந்நிலையில் பத்து விநாடிகள் இருக்கவும்.
* பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும்.

* மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டே கைகளை கால் நோக்கி உயர்த்த வேண்டும். அந்நிலையில் மூச்சை அடக்கியிருக்க வேண்டும். பின் மூச்சை வெளியில் விட்டு சாதாரண நிலைக்கு வர வேண்டும்.

* மூன்று முறைகள் செய்யவும். ஒவ்வொரு முறை செய்து விட்டு ஒரு நிமிடம் ஓய்வெடுக்கவும்.

குறிப்பு:- முதுகுவலி அதிகம் உள்ளவர்கள் முதுகில் அறுவை சிகிச்சை ஏதேனும் செய்தவர்கள் இந்த ஆசனத்தை தனியாக செய்ய முயற்சிக்க வேண்டாம். தகுந்த ஆசானின் உதவியுடன் செய்யவும். இதயஅறுவை சிகிச்சை செய்தவர்கள் இதனை செய்ய முயற்சிக்காதீர்கள்.

பலன்கள்

முகப்பொலிவு:- இந்த ஆசனம் முகத்திலுள்ள எல்லா தசைகளும் நன்கு பளபளப்பாக இருக்க உதவுகின்றது. முகம் முழுவதும் ரத்த ஓட்டம் சிறப்பாக பாயும். முகமலர்ச்சியை தருகின்றது.

குடல் சுத்தம்:- சிறுகுடல், பெருங்குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகின்றது. குடல் சுத்தமாவதால் எண்ணங்கள் சுத்தமாகின்றது. அதனால் அகமலர்ச்சியுடன் சேர்ந்து முகமலர்ச்சியை தருகின்றது.

மூன்று முதுகுவலி:- கழுத்து வலி, நடு முதுகுவலி, அடி முதுகுவலி மூன்றையம் வராமல் தடுக்கும் அருமையான ஆசனமிது. வந்தாலும் முறையாக தினமும் பயிற்சி செய்தால் முதுகெலும்பு பலம் பெறும். முதுகுவலியையும் நீக்குகின்றது.

குடல் இறக்கம்:- குடல் இறக்கம் வராமல் குடலை திடப்படுத்துகின்றது. வயிற்றுப்போக்கு அதிகமாக சென்றால் உடன் இந்த ஆசனம் செய்தால் சரியாகிவிடும். குடல் இறக்கத்தினால் தான் அதிக வயிற்றுப்போக்கு ஏற்படுகின்றது.

சிறுநீரக உறுப்பு:- சிறுநீரகப்பை, சிறுநீரக உறுப்பை வலுவாக்கி, அதன் குறைபாடுகளை அகற்றுகின்றது.

அதிக வயிற்றுத் தசை:- அதிக வயிற்றுத் தசையை குறைத்து அழகாக, மிடுக்காக, சுறுசுறுப்பாக வாழ வழி வகை செய்கின்றது.

இடுப்பு வலி:- இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்களுக்கு இந்த ஆசனம் ஒரு வரப் பிரசாதமாகும். இடுப்பு வலியை நீக்குகின்றது.

நரம்புத் தளர்ச்சி:- நரம்புத் தளர்ச்சியை நீக்குகின்றது. உடல் நடுக்கம், கைகால் நடுக்கத்தை சரி செய்கின்றது.

ஆண்மைக் குறைவு:- ஆண்மைக் குறைவை நீக்குகின்றது. பெண்களுக்கான மாதவிலக்கு நாட்களில் வரும் பிரச்சனை, வயிற்று வலி, நாள் தள்ளிப் போதல், கழிவுகள் சரியாக வெளியேறாமல் இருத்தல் போன்ற வியாதிகளை நீக்குகின்றது.
Tags:    

Similar News