லைஃப்ஸ்டைல்
ஏக பாத கபோடாசனா அல்லது புறா போல அமர்ந்திருக்கும் நிலை

கால்களை வலுவாக்கும் ஏக பாத கபோடாசனா

Published On 2020-02-29 04:05 GMT   |   Update On 2020-02-29 04:05 GMT
இந்த யோகாசனப் பயிற்சியானது உங்களது கால் இணைப்புத் தசைகள் மற்றும் திசுக்களை வலுவாக்கும். இடுப்பு மற்றும் முதுகெலும்புகளில் நிலவும் இறுக்கத்தை குறைக்கும்.
செய்முறை

யோகா மேட்டில் முதலில் முழங்காலிட்டு அமர்ந்து கொண்டு பின் மெதுவாக வலக்காலை பத்மாசன நிலைக்கு நகர்த்தி அமர்ந்து கொண்டு இடக்காலை பின்னோக்கி நீளச் செய்து இரு கைகளையும் தரை தொடுமாறு வைத்துக் கொள்ளவும். இதே நிலையில் 30 விநாடிகள் இருந்து விட்டு பின் கால் மாற்றி இதே பயிற்சியை மீண்டும் 30 விநாடிகள் செய்யலாம். பார்ப்பதற்கு புறாக்கள் அமர்ந்திருப்பது போன்று தோற்றமளிக்கும்.

பலன்: இந்த யோகாசனப் பயிற்சியானது உங்களது கால் இணைப்புத் தசைகள் மற்றும் திசுக்களை வலுவாக்கும். இடுப்பு மற்றும் முதுகெலும்புகளில் நிலவும் இறுக்கத்தை குறைக்கும்.

ரத்த அழுத்தத்தை சீராக்கி மனம் மற்றூம் உடலை அமைதி நிலையில் வைத்துக் கொள்ள உதவும்.
Tags:    

Similar News