லைஃப்ஸ்டைல்
யோகா

யோகாவின் முழு பலனையும் பெற செய்ய வேண்டியவை

Published On 2020-02-27 02:56 GMT   |   Update On 2020-02-27 02:56 GMT
யோகாவின் பலன்களை முழுமையாக பெறுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து அதன்படி செய்தால் முழு பலனையும் பெறலாம்.
யோகாவின் பலன்களை முழுமையாக பெறுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து அதன்படி செய்தால் முழு பலனையும் பெறலாம்.

அமைதியான, மனஅழுத்தமற்ற மனம் உங்களுக்கு தேவையா? யோகா கடினமான உடற்பயிற்சி அல்ல, ஆனால் நேரம் செலவழித்து சரியாக செய்தால் நீண்டகாலம் பயனளிக்கும் பலன்களைத் தரும்.

யோகாவில் கலோரிகளுக்கு முக்கியத்துவம் இல்லை. உடலை ஆரோக்கியமாக, வலிமையாக, நோய் தடுப்பாற்றலுடன் இருக்க வைப்பதே நோக்கம்.
எங்கு செய்ய வேண்டும்: எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். குறைந்தது 20,-30 நிமிடங்கள். அதிகபட்சம் ஒரு மணி நேரமாவது.

சிறப்பான முடிவுகளைப் பெற தினசரி செய்ய வேண்டும். வாரத்துக்கு மூன்று நாள்கள் செய்தாலும் நல்லதே.

முதலில் ஒரு நிபுணரிடம் பயிற்சி பெற்றப் பின்னர் நீங்களே செய்யத் தொடங்கலாம். புத்தகம், டி.வி.டிகளை தவிர்க்கவும். ஆரோக்கியமான, புதிதான, குறைந்த அளவு, பதப்படுத்தப்படாத உணவுகள்.

வாழ்நாள் முழுவதும் யோகா செய்யலாம்.

டிவியில் காட்டப்படும் யோகாவை முயற்சிக்காதீர்கள். ஒரு பயிற்சியாளரை அணுகி, உங்களால் என்ன செய்ய முடியும் என்று அறிந்து கொள்ளவும். ஒரு சில உடல்பூர்வ, மனநிலை சிக்கல்களைக் கொண்டவர்களுக்கு சில உடற்பயிற்சிகள் தீங்குதரக் கூடும்.

Tags:    

Similar News