லைஃப்ஸ்டைல்
நடைப்பயிற்சி

தினமும் 10 ஆயிரம் அடி நடந்தால் பலன்

Published On 2020-02-24 02:55 GMT   |   Update On 2020-02-24 02:55 GMT
தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் அடிகள் நடப்பது, உடல் எடையில் குறிப்பிட்ட அளவு எடையை குறைக்கும், கொழுப்பை கரைக்கும் என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
நடைப்பயிற்சி பல்வேறு நன்மைகளை வழங்குவதாக பலரும் நம்புகிறோம். மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் அடிகள் நடப்பது, உடல் எடையில் குறிப்பிட்ட அளவு எடையை குறைக்கும், கொழுப்பை கரைக்கும் என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

கல்லூரி இளைஞர்கள் 120 பேரை 6 மாத காலத்திற்கு ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். தினமும் எத்தனை அடிகள் நடக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. சிலர் 10 ஆயிரம் அடிகளும், சிலர் 12 ஆயிரத்து 500 அடிகளும், சிலர் 15 ஆயிரம் அடிகளும் நடந்தனர். இன்னும் சிலர் குறைவான அடிகள் நடந்தனர்.

அவர்களின் உடலில் எரிக்கப்பட்ட கலோரிகள் ஆற்றல் மதிப்பிடப்பட்டது. குறைந்தபட்சம் 10 ஆயிரம் அடிகளுக்கு குறையாமல் நடந்தவர்களுக்கு எடையும், கொழுப்பின் அளவும் குறைந்தது உறுதி செய்யப்பட்டது. குறைவான பயிற்சி நல்ல பலனை தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் பிரிகாம் யங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வு முடிவை வெளியிட்டனர்.
Tags:    

Similar News