லைஃப்ஸ்டைல்
அர்த்தக்கட்டி சக்ராசனம்

இடுப்பு சதையை குறைக்கும் அர்த்தக்கட்டி சக்ராசனம்

Published On 2020-02-18 03:24 GMT   |   Update On 2020-02-18 03:24 GMT
இந்த ஆசனம் செய்து வந்தால் பக்கவாட்டில் உள்ள அதிக தசைகளை கரைத்து இடுப்பு அழகு பெறும். உங்களைப் பார்த்தவர்கள் பிரமிக்கும் வகையில் அழகான தோற்றமுண்டாகும்.
செய்முறை : விரிப்பின் மீது இருகால்களையும் ஒன்று சேர்த்து நிற்கவும். உங்கள் வலது கையை பக்கவாட்டில் உயர்த்தி, வலது காதுக்கு பக்கத்தில் ஒட்டியது போன்று நிறுத்தவும். இந்நிலையில் இடது பக்கவாட்டில் வளைந்து படத்தில் உள்ளபடி 15 முதல் இருபது எண்ணிக்கை செய்யவும். மூச்சை இழுத்துக் கொண்டே வளையவும். மூச்சை அடக்கி 15 முதல் 20 விநாடிகள் இருந்துவிட்டு பின்னர் மூச்சை வெளிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும். இதேபோல் மூன்று முறைகள் செய்யவும்.

பின்பு மாற்று ஆசனமாக இடது கையை உயர்த்தி செய்யவும். இப்படியாக வலப்பக்கம், இடப்பக்கம் மூன்று முறைகள் செய்யவும். பார்ப்பதற்கு எளிய ஆசனமாகத் தோன்றலாம். ஆனால் பலன்கள் ஏராளம்.

பக்கவாட்டில் உள்ள அதிக தசைகளை கரைத்து இடுப்பு அழகு பெறும். கல்லீரல், உணவுப்பை நன்றாக இயங்கும். இடுப்பு வலி நீங்கும். உங்களைப் பார்த்தவர்கள் பிரமிக்கும் வகையில் அழகான தோற்றமுண்டாகும். இந்த ஆசனத்தை காலை, மதியம், மாலை மூன்று வேளை சாப்பிடும் முன் பயிற்சி செய்யுங்கள். பசித்தால் மட்டும், உடல்மொழி அறிந்து உண்ணும் உணவில் முழுக்கவனம் வைத்து சாப்பிடுங்கள். பகலில் தூக்கம், இடைத்தீனி, எண்ணெய் பதார்த்தம் உண்பதை விடுங்கள் மாற்றத்தை காண்பீர்கள்.
Tags:    

Similar News