லைஃப்ஸ்டைல்
தசைகளை வலுப்படுத்தும் ஸ்ட்ரெங்த் உடற்பயிற்சி

தசைகளை வலுப்படுத்தும் ஸ்ட்ரெங்த் உடற்பயிற்சி

Published On 2019-10-31 03:08 GMT   |   Update On 2019-10-31 03:08 GMT
தசைகளை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுபவை ‘ஸ்ட்ரெங்த் எக்சர்சைசஸ்’. தசைகள் வலுவாக இருந்தால்தான் நம் உடலின் தோற்றம், ஸ்திரத்தன்மை சரியாக இருக்கும்.
தசைகளை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுபவை ‘ஸ்ட்ரெங்த் எக்சர்சைசஸ்’. தசைகள் வலுவாக இருந்தால்தான் நம் உடலின் தோற்றம், ஸ்திரத்தன்மை சரியாக இருக்கும். மூட்டுத் தேய்மானங்கள் குறைந்து, எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.
 
ஜிம்முக்குப் போய்தான் ஸ்ட்ரெங்த் எக்சர்சைஸ் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே தண்ணீர் நிரம்பிய வாட்டர்கேனை வைத்துக்கூட தம்பள்ஸ் (Dumbbells) எடுக்கலாம்.
 
ஸ்ட்ரெங்த் எக்சர்சைஸில் மார்புத் தசைகளுக்கான பயிற்சிகள் (Chest muscle groups), தோள்பட்டைகளுக்கான பயிற்சிகள் (Arm muscle groups), முதுகுப் பகுதிக்கான பயிற்சிகள் (Back muscle groups), கைகளுக்கான பயிற்சிகள் (Hand muscle groups), கால்களுக்கான பயிற்சிகள் (Leg muscle groups) எனப்  பல வகைகள் உள்ளன.
 
ஏரோபிக் பயிற்சிகளிலும் தசைகள் வலுவடையும். ஆனால், அது போதாது. ஸ்ட்ரெங்த் எக்சர்சைஸ் செய்தால்தான் முழுமையான பலன் கிடைக்கும்.
 
வெயிட் லிஃப்டிங், ஸ்ட்ரெங்த் எக்சர்சைஸில் முக்கியமான ஒன்று. வெயிட் லிஃப்டிங்கில் சில வழிமுறைகள் உள்ளன. யார் எந்த அளவுக்கான எடையைத் தூக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்தது. ஒருவரால் 100 கிலோ எடையைத் தூக்க முடியும் என்றால், 60 முதல் 80 கிலோ வரை தூக்கலாம். அதாவது 60% முதல் 80% வரை தூக்கலாம். பாடி பில்டர்ஸ் மட்டும்தான் வெயிட் லிஃப்டிங் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லைஸ அனைவரும் செய்யலாம்.
Tags:    

Similar News