லைஃப்ஸ்டைல்
கொழுப்பை விரைவில் கரைக்கும் உடற்பயிற்சிகள்

கொழுப்பை விரைவில் கரைக்கும் உடற்பயிற்சிகள்

Published On 2019-10-17 02:53 GMT   |   Update On 2019-10-17 02:53 GMT
சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் உடலில் சில பகுதிகளில் உள்ள அதிகப்படியான கொழுப்பை விரைவில் எரிக்க முடியும்.
• நடைப் பயிற்சியின் மூலம் உடலில் அதிகமாக உள்ள கொழுப்புகள் எரிக்கப்படும் - மார்பில் உள்ள கொழுப்புகள் மட்டுமல்லாமல் வயிறு, அடி வயிறு போன்ற இடங்களின் கொழுப்புகளும் கரையும். ஓடுவதன் மூலம் உங்களுடைய உடலின் தலை முடி முதல் கால் பாதம் வரையிலான பகுதிகள் அனைத்தும் அதிர்வடைகின்றன.

இதன் மூலம் 70 முதல் 80 சதவிகித அளவிற்கு கொழுப்புகளை கரைக்க முடியும். உங்களுடைய மார்பக கொழுப்புகளை நீங்கள் கரைக்க விரும்பினால் ஒரு நாளுக்கு 2 கிமீ தூரம் ஓட வேண்டும். இதில் உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு ஓடத் துவங்கும் போது கடினமாக இருந்தால், மெதுவாக ஜாகிங் செய்வது போல ஓடுங்கள்.

• உங்களுடைய தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் மற்றுமொரு பயனுள்ள உடற்பயிற்சி ஸ்கிப்பிங். இந்த பயிற்சி உங்களுடைய மார்பு மற்றும் பிற உடல் பகுதிகளிலிருந்து 100% கொழுப்பை கரைக்கும் பயிற்சி ஆகும். நீங்கள் இந்த பயிற்சியை தினமும் செய்து வந்தால் ஒரே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த உடற்பயிற்சியை ஓடும் போதோ அல்லது ஓடாமலோ கூட செய்யலாம். ஆனால், ஓடி முடித்த பின்னரும், உங்களுடைய ஓய்வு வேளையிலும் இந்த பயிற்சியை செய்ய மறக்க வேண்டாம். கயிறு கொண்டு ஸ்கிப்பிங் செய்வது உங்களுக்கு கடினமாக இருந்தால், மெதுவாக குதித்து இந்த பயிற்சியை தொடங்குங்கள்.

ஆரம்பத்தில் 90 முதல் 150 முறை ஸ்கிப்பிங் செய்யத் தொடங்கி, போகப்போக அளவை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த எண்கள் அதிகமாக இருப்பதை எண்ணி பயப்படாமல் மூன்று தடவைகளாக இந்த பயிற்சியை செய்ய தொடங்குங்கள், எண்களும் எடையும் படிப்படியாக குறையும்.

• மார்பகங்களை ஆண்மைத் தன்மையுடன் காட்டுவதற்கு புஷ்-அப் பயிற்சி மிகவும் உதவும். இது சற்றே கடினமான பயிற்சியாக இருந்தாலும், செய்ய முடியாத பயிற்சி கிடையாது. புஷ்-அப் பயிற்சிகள் மார்பகங்களை முறைப்படுத்துவதற்கான ஸ்பெஷல் உடற்பயிற்சியாக இருப்பதால் அது மார்பகத்தில் உள்ள கொழுப்புகளை நேரடியாக குறைக்கிறது.

இந்த பயிற்சியை தொடங்கும் போது உங்களுடைய பாதங்களில் முழுமையான அழுத்தம் தராமல் முழங்கால்களை பயன்படுத்துங்கள். ஓட்டம் மற்றும் ஸ்கிப்பிங் பயிற்சிகளுக்குப் பின்னர் இந்த உடற்பயிற்சியை நீங்கள் செய்யலாம். புஷ்-அப் பயிற்சியை செய்யத் தொடங்கும் முன்னர் உங்களை நீங்கள் சிறு சிறு பயிற்சிகள் செய்து தயார்படுத்த வேண்டியது அவசியம்.
Tags:    

Similar News