லைஃப்ஸ்டைல்
மூச்சுப் பயிற்சி

அமைதிப்படுத்தும் மூச்சுப் பயிற்சி

Published On 2019-09-17 03:18 GMT   |   Update On 2019-09-17 03:18 GMT
அமைதிப்படுத்தும் மூச்சுப்பயிற்சியானது ஒருவரை விரைவில் ஆழமாக அமைதிப்படுத்தும், மனத்தைத் தளரவைக்கும். இந்த பயிற்சி செய்முறையை பார்க்கலாம்.
அமைதிப்படுத்தும் மூச்சுப்பயிற்சியானது யோகாசனம் என்கிற பழங்கலையிலிருந்து விவரிக்கப்படுகிறது. இது வயிற்றின்மூலம் மூச்சுவிடும் உத்தியைப் பயன்படுத்துகிறது. அமைதிப்படுத்தும் மூச்சுப்பயிற்சியானது ஒருவரை விரைவில் ஆழமாக அமைதிப்படுத்தும், மனத்தைத் தளரவைக்கும்.

படிநிலைகள்:

1. சத்தமில்லாத, அமைதியான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். கையை வயிற்றில் வைக்கவும், தோள்கள், நெஞ்சைத் தளர்வாக வைக்கவும். மூக்கின்மூலம் காற்றை மெதுவாக உள்ளிழுக்கவும், வயிறு மேலே எழும்புவதை உணரவும், ஐந்துவரை எண்ணவும்.

2. ஒரு சிறு இடைவெளிவிடவும். ஐந்துவரை எண்ணவும், காற்றை வெளிவிடவேண்டாம்.

3. மூக்கு அல்லது வாயின்வழியே காற்றை வெளிவிடவும், ஐந்துவரை எண்ணவும், அதற்குமேலும் எண்ணலாம். காற்றை முழுமையாக வெளிவிடுவது முக்கியம்.

4. காற்றை முழுமையாக வெளிவிட்டதும், வயிறு தட்டையானதும், வழக்கமான பாணியில் இரண்டுமுறை மூச்சுவிடவும். பிறகு, மேலே கண்ட படிநிலைகள் 1 முதல் 3வரை திரும்பச் செய்யவும்.

5. இந்தப் பயிற்சியைக் குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குத் தொடரவும். இந்த நேரத்தில், குறைந்தபட்சம் ஐந்துமுறையாவது மூச்சுச்சுழலைப் பூர்த்திசெய்யலாம்: உள்ளிழுத்தல்-ஐந்து, வைத்திருத்தல்-ஐந்து, வெளிவிடல்-ஐந்து அல்லது அதற்குமேல். இதைத் தொடர்ந்து செய்யச்செய்ய, காற்றை வெளிவிடும் நேரமானது காற்றை உள்ளிழுக்கும் நேரத்தைவிடக் கொஞ்சம் அதிகமாக இருப்பதைக் காணலாம். அந்த வித்தியாசங்கள் அப்படியே இருக்கட்டும், ஐந்து நிமிடங்களுக்கு இந்தப் பயிற்சியைத் தொடரவும்.

விரும்பினால் இதையும் செய்யலாம்: ஒவ்வொருமுறை மூச்சை வெளிவிடும்போதும், ஒரு நேர்விதமான சொல்லைக் குறிப்பிடலாம். உதாரணமாக, 'calm' என்ற ஆங்கிலச்சொல்லைச் சொல்லலாம். அல்லது, ஒரு நேர்விதமான காட்சியை அல்லது எண்ணத்தைப்பற்றிச் சிந்திக்கலாம், இதைச் செய்யும்போது உடலைத் தளர்வாக விடலாம். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால், சில நாள்களில் அந்த நேர்விதமான சொல்லைச் சொல்லும்போதே, அல்லது, அந்த நேர்விதமான காட்சி அல்லது எண்ணத்தை எண்ணும்போதே மனம் கொஞ்சம் தளர்வடைவதை உணரலாம்.

Tags:    

Similar News