லைஃப்ஸ்டைல்

இடுப்பு, முதுகுத்தண்டை வலுவடைய செய்யும் 2 உடற்பயிற்சிகள்

Published On 2019-04-04 03:21 GMT   |   Update On 2019-04-04 03:21 GMT
இந்த 2 உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு, தொடைப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைக்கும். முதுகுத்தண்டு வலுவடையும்.
தினமும் உடற்பயிற்சி செய்தாலே எடையைக் குறைத்து, தேவையற்ற கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ளலாம். கீழே கொடுத்துள்ள 2 பயிற்சியையும் முதலில் 15 முறை செய்து, பிறகு தொடர்ந்து எண்ணிக்கையை அதிகப்படுத்தி, எளிதில் எடையைக் குறைக்கலாம்.

புஷ் அப் வித் ரொட்டேஷன் (Push up with rotation)

ஒருக்களித்துப் படுத்து, இடது கையை தரையில் ஊன்றி, உடல் தரையில் படாதவாறு ஒரு பக்கமாக, பாதம் மற்றும் கையால் பேலன்ஸ் செய்ய வேண்டும். வலது கையை பின்புறமாகத் திரும்பி உயர்த்த வேண்டும். இதே நிலையில் சிறிது நேரம் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். அடுத்து, இன்னொரு கைக்கும் இதே போல் செய்ய வேண்டும்.

பலன்கள்: இதயத் துடிப்பு சீராக உதவும். தோள், கை சதைகள் வலுவடையும். இடுப்புப் பகுதியில் கொழுப்பைக் குறைக்கும்.

ரஷ்யன் ட்விஸ்ட் (Russian twist)

தரையில் மல்லாந்து படுத்து, தலை, மேல் உடல் மற்றும் கால் தரையில் படாதவாறு உயர்த்திக் கொள்ள வேண்டும். இரு கைகளையும் விரல்களால் கோத்துக் கொள்ள வேண்டும். கைகளை வலது புறமாக அசைக்கும்போது, கழுத்தை இடது புறமாகவும், கைகளை இடது புறம் அசைக்கும்போது கழுத்தை வலது புறமாகவும் திருப்ப வேண்டும். கைகள், தலையைத் தவிர, உடலின் மற்ற எந்தப் பகுதியும் அசையக் கூடாது.

பலன்கள்: தொப்பை கரையும். தொடைப் பகுதியில் உள்ள தேவையற்ற சதை நீங்கும். முதுகுத்தண்டு வலுவடையும்.
Tags:    

Similar News