லைஃப்ஸ்டைல்

மூட்டு வலியை குணமாக்கும் ஆஞ்சநேய ஆசனம்

Published On 2019-01-03 04:24 GMT   |   Update On 2019-01-03 04:25 GMT
மூட்டு வலியை குணமாக்கவும், கால்களின் நரம்பு சுருண்டு இருந்தால் சரி செய்யவும் ஆஞ்சநேய ஆசனம் பயன் தருகிறது. இன்று இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை :

விரிப்பில் முதலில் 2 கால்களையும் நீட்டி உட்கார்ந்து கொள்ள வேண்டும். பின்னர் கால்களின் பாதங்களை முன்னும்,பின்னுமாக அசைத்து தளர்த்திக் கொள்வது முக்கியம். இடது முன்னங்காலை தரையில் ஊன்றி குதிங்காலை மேல் நோக்கி தூக்கிய நிலையில் வைக்க வேண்டும்.

பின்பு குதிங்கால் மீது படத்தில் உள்ளது போன்று உடலின் பின்பகுதியை வைத்து உட்கார்ந்து கொள்ள வேண்டும். இப்போது வலது காலை மடக்கி வலது கால் பாதமானது இடது தொடை மீது வயிற்றுடன் ஒட்டிய நிலையில் இருக்குமாறு வைக்க வேண்டும். 2 கைகயையும் மார்புக்கு நேராக கும்பிட்ட நிலையில் வைக்க வேண்டும்.



இது தான் ஆஞ்சநேய ஆசனத்தின் அமைப்பாகும். இவ்வாறு 10 முதல் 20 வினாடிகள் வரை உட்கார்ந்து விட்டு பின்னர் படிப்படியாக பழைய நிலைக்கு வர வேண்டும். ஆசனப்பயிற்சியின் போது சுவாசம் சாதாரண நிலையில் இருப்பதுடன் செய்து முடித்த பின்பு கால்களை மாற்றி இதே முறையில் வலது காலை ஊன்றி ஆஞ்சநேய ஆசனத்தை செய்யலாம்.

பயன்கள் :

முகம் பொலிவு பெறவும், தொடை தசை இறுக்கம் குறையவும், தட்டையான பாதத்தை சரி செய்யவும், மூட்டு வலியை குணமாக்கவும், கால்களின் நரம்பு சுருண்டு இருந்தால் சரி செய்யவும் ஆஞ்சநேய ஆசனம் பயன் தருகிறது.
Tags:    

Similar News