லைஃப்ஸ்டைல்

சுவாச கோளாறுகளை நீக்கும் உதான் முத்திரை

Published On 2018-10-27 04:54 GMT   |   Update On 2018-10-27 04:54 GMT
உதான் முத்திரையை தொடர்ந்து செய்வதால் சுவாச மண்டலத்தின் சக்தி அதிகரித்து சுவாச கோளாறுகள் நீங்குகிறது. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
இந்த முத்திரை உதான சக்தியை அதிகம் கொடுக்கிறது. அதாவது யோக சாஸ்திரத்தில் 5 வகையான சக்தி உள்ளது. அவைகள் பிராண சக்தி, அபான சக்தி, உதான சக்தி, சமான சக்தி, வியான சக்தி என்று 5 சக்திகள் உள்ளன. இதில் உதான சக்தி தலைக்கும் தொண்டைக்கும் இடையே உள்ள நடுப்பகுதியில் உள்ளது. இது தொண்டைப்பகுதியை பாதுகாக்கிறது.

செய்முறை:

நமது கை விரல்களை குவித்து அதாவது பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல், மோதிரவிரல் ஆகிய 4 விரல்களின் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு சிறு விரலை நேராக நீட்டிக்கொள்ளவேண்டும். இதுதான் உதான் முத்திரை

பயன்கள்

* இந்த முத்திரை பயிற்சியால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கிறது.
* உடலின் மேல் தோலுக்கு அதிக சக்தி கிடைத்து பளபளப்பாக இருக்கும்.
* தோல் சம்பந்தமான வியாதிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
* உடலின் அனைத்து உறுப்புகளும் சக்தியுடன் விளங்கும்.
* இந்த முத்திரை பயிற்சியால் நெஞ்சு பகுதியிலிருந்து வயிற்றுப்பகுதி வரை சக்தியுடன் பாதுக்காக்கிறது.
* இருமல் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
* தொண்டையில் ஏற்படும் நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
* தைராய்டு அதிகம் சுரப்பது தைராய்டு குறைவாக சுரப்பது போன்ற இரு நோய்களிலிருந்தும்  நிவாரணம் கிடைக்கிறது.
* இந்த முத்திரை பயிற்சியால் திக்கி திக்கி பேசுவதிலிருந்தும், பேச்சு சரிவராமல் இருப்பதிலிருந்தும் நிவாரணம் கிடைத்து நன்றாக பேசும் சக்தியும் குரல் வளமும் நன்றாக செயல்படுகிறது.
* சிறுநீரகத்தில் ஏற்படும் குறைபாடுகள் நீங்குகிறது.
* சுவாச மண்டலத்தின் சக்தி அதிகரித்து சுவாச கோளாறுகள் நீங்குகிறது.
* கை கால்களுக்கு அதிக வலு கிடைக்கிறது.

இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் செய்யலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் செய்யலாம். எவ்வளவு அதிக நேரம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அதற்குரிய நோயிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கிறது.
Tags:    

Similar News